Thursday, November 20, 2014

கேரட் மருத்துவம்:-

  • பால், வெண்ணைய் சாப்பிட்டால் நிறைய வைட்டமின் 'ஏ' கிடைக்கும். அதற்கு வசதியில்லாதவர்கள் நிறைய கேரட் சேர்த்துக்கொண்டால் கிட்டத்தட்ட அதே அளவு வைட்டமின் 'ஏ' சத்தினை மலிவாகப் பெறலாம். 
  • வாழ்நாள் இறுதிவரை கண்களுக்கு கண்ணாடி அணியாமல் தவிர்க்க கேரட் நிறைய சாப்பிடவும். 
  • வயிற்றில் அமிலம் காரணமாக புளியேப்பம், பசி மந்தம் ஏற்பட்டால் கேரட்டை துருவி பச்சடி செய்து சாப்பிடுங்கள். 
  • காரட்டில் 'காரடீன்' என்ற சிறப்புப் பொருள் உள்ளது. இதுவே வைட்டமின் உண்டாவதற்குக் காரணமாக இருப்பது. 
  • தொற்று நோய்கள் நமக்கு வராமல் விரட்டுகிறது. 
  • உடலிலுள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கேரட்டிற்கு உண்டு. 
  • இரத்தக் குறைவு காரணமாக உடலில் சோகை ஏற்பட்டால் காரட் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். 
  • சிறுநீர் சம்பந்தமான கோளாறுகளைச் சரிபடுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு. 
  • சர்க்கரை நோய் உடையவர்கள் இதனை உண்டால் நோய் கொஞ்சம் கட்டுப்படும். தோலின் மென்மைக்கும், பாதுகாப்புக்கும் காரட்டிற்கு முக்கிய பங்கு உண்டு. 
  • காரட்டை பச்சை உணவாக உண்பதே மிகவும் சிறந்தது.

No comments:

Post a Comment