Saturday, November 22, 2014

வேப்பம்பூவின் பயன்கள்

வேப்பின் பல பயன்களை பற்றி அறிந்திருப்போம். வேப்பிலையை வேறு எந்த மாதிரி எல்லாம் உபயோகப்படுத்தலாம் என இங்கே பார்க்கலாம். பித்த பிரச்சனை மற்றும் கிருமியால் அவதி படுபவர்கள் வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறைகிந்துவிடும். உடலில் உள்ள ஒரு சிறு கிருமிகளும் அழிந்து விடும்.

வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் தோல் வியாதி நீங்கிவிடும். அந்த பொடியை தணலில் போட்டு வீடு முழுவதும் புகையை பரவ விட்டால் விஷப்பூச்சிகள், கொசு, மூட்டைபூச்சி தொல்லைகள் ஓழிந்துவிடும். தினமும் வேப்ப இலைகளை நீரில் போட்டு வைத்து விட்டு ஒரிரு மணி நேரம் கழித்து குளிக்க தோல் வியாதியே வராமல் இருக்கும். வேப்ப இலை கொத்துகள் நான்கை எடுத்து தண்டு மட்டும் வெண்ணீரில் படுமாறு செய்து கால்மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அந்த சாற்றை இரண்டு நாட்கள் குடித்து வர வயிற்று எரிச்சல் நிற்கும்.
வேப்பிலை சாற்றை எடுத்து மோருடன் கலந்து சாப்பிட வயிற்று பூச்சிகள் ஓழியும். வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பேன், பொடுகு, ஈறு போன்றவை அகன்று விடும். வேப்பிலைக் கொழுந்தை தினமும் பச்சையாகச் சிறிதளவு மென்று வந்தால் வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரவே வராது. வேப்பிலைக் கொழுந்தை இடித்து சாறு பிழிந்து அதில் சிறிது தேனைச் சேர்த்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் இறந்தோ உயிருடனோ உடலை விட்டு வெளியேறிவிடும்.
வேப்பங்கொழுந்தை பசு மோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண்ணில் பூசினால் சீக்கிரம் காயம் ஆறும். வேப்பங்கொழுந்து இலையை அரைத்து ஒரு கோலி அளவு எருமை தயிரில் மூன்று நாட்கள் உள்ளுக்குள் உட்கொண்டு வந்தால்தொண்டைக்கறமல் குணமாகும். வேப்பம் பூ, மிளகு, இவை இரண்டையும் சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை கோளாறு நீங்கும். வேப்பிலையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரில் முகம் கழுகி வந்தால் முகம் பளபளப்பு அடையும்.
மழைக்காலங்களில் ஈக்கள் தொல்லை அதிகமாகும்.
ஈக்கள் தொல்லையை விரட்ட வேப்பிலையை கசக்கி டைனிங்டேபிளில் வைத்து விட்டால் ஈக்கள் வராது.மாத விலக்கின் போது வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் 3 கொத்து வேப்பிலையை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து கொதிக்கும் முன்னர் மஞ்சள் சேர்த்து குடித்தால் வயிற்று வலி குணமாகும். தலையில் நீர் கோர்த்து தலைவலியால் அவதி படுபவர்கள் இந்த வேப்பிலை மஞ்சளை நன்கு கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் தலைவலி குணமாகும்.
வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.
வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.
வேறுபெயர்கள்
அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி.
மருத்துவப் பண்புகள்
இலை
1)புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.
2)வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.
3)வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.
4)வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
பூ
பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.
காய் + பழம்
தோல் நோய் தீரும்.
விதை
1)மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.
2)விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.
நெய்
1)துஷ்ட புண்கள் தீரும்.
2)ஆராத இரணங்கள் தீரும்.
வேப்பம் பட்டை
1)வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.
2)கஷாயம் குட்டம் தீரும்.
அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை நிர்ணயிக்கும் Chromosomes சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. வேம்பு Chromosome களை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.
பிசின்
1)மேக நோயைப் போக்கும்.
குறிப்புகள்
பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.
100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.
பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.
வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும்.
வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1 மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை உடையதாகும். விந்து கட்டும்
வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.
நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது

No comments:

Post a Comment