Monday, November 3, 2014

"காராமணி ரைஸ்"

தேவையான பொருட்கள்:
பச்சரிசி, காராமணி, தக்காளி, சின்ன வெங்காயம், புளி தண்ணீர், குழம்பு மிளகாய் தூள், காய்ந்த மிளகாய், பூண்டு, எண்ணெய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள்.
செய்முறை:
1. வானலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, அதோடு பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்பு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து மசிந்து வரும் வரை வதக்கவும்.
2. குக்கரில் அரிசி, காராமணி, புளி தண்ணீர் ஆகியவற்றை எடுத்து வைக்கவும்.
3. தக்காளி நன்கு மசிந்தவுடன், குழம்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி, குக்கரில் சேர்க்கவும்.
4. அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கர் மூடி போட்டு மூடி 3 விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
இப்பொழுது சுவையான காராமணி ரைஸ் தயார்.

No comments:

Post a Comment