Monday, December 19, 2016

இயற்கை மருத்துவம்

1) தினமும் ஒரு செம்பருத்தி பூவை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சூடு தணிந்து இரத்தம் விருத்தியாகும்.
2) முருங்கை பட்டை மற்றும் சுக்கு இவற்றை ஊற வைத்து பின்பு அதை நன்றாக மைய அரைத்து கால் வலி ஏற்பட்ட இடத்தில் பூச வலி குறையும்.
3) விஷம் உள்ள வீட்டுப் பூச்சிகள் கடித்துவிட்டால் ஆடாதொடை இலையை சுத்தம் செய்து அரைத்து சிறிதளவு வெந்நீரில் கலந்து குடிக்க விஷம் முறியும்.
4) சுக்கு, ஆவாரம்பட்டை சம அளவு எடுத்து 200 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆற வைத்து சாப்பிட்டு வர கை, கால் வலி குறையும்.

5) அடிக்கடி மயக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் காப்பி, தேனீர் இவற்றுக்குப் பதிலாக எலுமிச்சம் பழச்சாற்றைக் குடிப்பது நல்லது
6) வெள்ளை பூண்டு, வெற்றிலை காம்பு, வசம்பு, திப்பிலியை வெந்நீரில் அரைத்து குடித்தால் சளி குறையும்.
7) தினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன்பு சிறியா நங்கையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு மற்றும் அலர்ஜி வியாதிகள் குணமாகும்.
8) தூள் உப்பையும், நெய்யையும் சமஅளவு எடுத்து குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் வராது.
9) சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.
10) தினமும் இருமுறை அதிமதுரத்தின் சிறு துண்டை வாயில் போட்டு ஒதுக்கி கொண்டால் நெஞ்சு கமறல் உடன் நீங்கும்.

No comments:

Post a Comment