Sunday, December 11, 2016

எப்படி தூங்க வேண்டும்?

பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும்.
அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும்.காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.
எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.
வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்?
அறிவியல் – புறச் சுழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும்.
நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது இது மிக அதிகம்.
இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும் குன்றிவிடும்.
(உ.ம் – சூடான தோசைக் கல்லில் நீர் தெளித்தல்).
இதனால் இரத்தம் மற்றும் வெப்பம் சம்மந்தமான வியாதிகள் வந்துவிடும்.
தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இது பற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக் கிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, `சரியாக தூங்காதவர்களே பிரச் சினைகளில் ஈடுபடுகிறார்கள்’ என்று கூறுகிறது.
சரியாக தூங்குவது என்றால் எப்படி? தூங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது பற்றி இங்கே…
* தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச் சி பெறும். வலுவுண்டாகும். தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்குதூங்கச் செல்ல வேண்டும். அதே போல குறிப் பிட்ட நேரம் தூங்குவதும் அவசி யம். குறைந்தபட்சம் தின மும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.
* எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பது பற்றியும் விதி இரு க்கிறது. “கிழக்கு சிறந்தது; மேற்கு பரவா யில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வட க்கு ஆகாது” என்பது மருத்துவர்கள் சொ ல்லும் குறிப்பு. வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால் மூளையின் ஓய்வுக்கு இடையூறு ஏற்படு ம் என்பதால் வடக்கே தலை வைக்கக் கூடாது என்பார்கள்.
* தூங்குவதற்கு ஏற்ற படுக்கை பஞ்சு மெத்தைதான். `இலவம் பஞ் சில் துயில்’ என்று நம் முன்னோர் கூறியிருக்கிறார் கள்.
* படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது கா லை நீட்டி இடது கால் மேல் வைத்து, வல து கையை நீட்டி, வலது கால் மீது வைத் துக் கொண்டு தூங்க வேண்டும்.
* இடது புறமாக ஒருக்களித்து தூங்கும் போது, வலதுபுற நாசி வழி யாக மூச்சுக் காற்று இயங்கும். இது நல்ல தூக்கத்தை தரும். உடம்பு க்குத் தேவையான வெப் பம் கிடைக்கும். இப்படிப் படுப்பதால் நோய் விரைவில் குணமாவதாக கூறுவார்கள்.
* கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உற ங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. குப்புறப் படுக் கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
* எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகல் தூக்கம் வாதத்தை வரவழைக்கலாம். இர வு தூக்கம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி யைத் தரும்.
 தூக்கம் எப்பொழுதுமே உடலுக்கு எனர்ஜியை அளிக்க வல்லது. அதாவது தூக்கம் உடலுக்கு சக்தி வழங்குவதில் மிகவும் உபயோகமாக இருக்கிறது. நன்றாகத் தூங்கி எழுந்தாலே உடம்பு ரொம்ப பிரெஷ்சாக ரீசார்ஜ் பண்ணியதுபோல் ஆகிவிடுகிறது என்று சிலர் சொல்வதுண்டு. மனிதனின் தூக்கத் தேவை இருக்கிறதே, அது வயதுக்கு வயது வித்தியாசப்படும். அதே மாதிரி ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும்.

பகலில் தூங்காமல் இரவு மட்டும் தூங்கினால் அந்தத் தூக்கம் ஓரளவு போதுமானதாகவே இருக்கும். பகலில் தூங்குகிறவர்களுக்கு இரவில் அதிகமாக தூங்கிய திருப்தி இருக்காது. சாதாரணமாக உடலில் உள்ள உஷ்ணத்தை விட கொஞ்சம் குறைவான உஷ்ணத்தோடு ஒரு மனிதன் தொடர்ந்து சுமார் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். பிறந்த குழந்தைகள் பதினெட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

கண்டிப்பாக தூங்கும். நீங்கள் உங்கள் வீட்டிலேயே பார்த்திருக்கலாம். ஒரு வயது ஆகும் வரை குழந்தைகள் சுமார் 14-லிருந்து 18 மணி நேரம் வரை தூங்கும். ஒன்றிலிருந்து மூன்று வயது வரை சுமார் 12 மணியில் இருந்து 15 மணி நேரம் வரை தூங்கும். மூன்றிலிருந்து ஐந்து வயது வரை சுமார் 11 மணியில் இருந்து 13 மணி நேரம் வரை தூங்கும். 5 வயதில் இருந்து 12 வயது வரை சுமார் 9 மணியில் இருந்து 11 மணி நேரம் வரை தூங்கும். பதினாறு வயதை அடையும் பருவத்தில் சுமார் 9-ல் இருந்து 10 மணி நேரம் வரை தூங்குவார்கள்.

பெரிய மனிதர்கள் எல்லோருமே சுமார் 7-ல் இருந்து 8 மணி நேரம் வரை தூங்குவார்கள். கர்ப்பிணி பெண்கள் சுமார் 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குவார்கள். மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் தூங்கும் நேரம் ஒவ்வொன்றுக்கும் மாறுபடும். வவ்வால் சுமார் 19 மணி நேரம் தூங்கும். மலைப்பாம்பு சுமார் 17 மணி நேரம் தூங்கும். பிறந்த குழந்தையைப் போலவே புலியும் சுமார் 16 மணி நேரம் தூங்கும். அணில் சுமார் 15 மணி நேரம் தூங்கும்.

சிங்கம் சுமார் 13 மணி நேரம் தூங்கும். ஆண் சிங்கத்தை விட பெண் சிங்கம் ரொம்ப நேரம் தூங்கும். ஏனெனில் அதற்கு ரெஸ்ட் அதிகம் தேவை. ஏனென்றால் இரையைத் தேடி ஓடி வேட்டையாடி கொண்டு வந்து சேர்ப்பது பெண் சிங்கம் தானே. நாய், சுமார் 10 மணி நேரம் தூங்கும். பன்றி சுமார் 8 மணி நேரம் தூங்கும். பசுமாடு, ஆடு, ஆசிய யானைகள் சுமார் 4 மணி நேரம் தூங்கும். கழுதை, குதிரை, ஆப்பிரிக்க யானைகள் சுமார் 3 மணி நேரம் தூங்கும்.

முக்கால்வாசி வாழ்க்கையை பூனை தூக்கத்திலேயே செலவழித்து விடும். தூக்கம் எப்படி ஏற்படுகிறது. ஒழுங்காக தூங்கா விட்டால் உடலுக்கு என்ன கெடுதி ஏற்படும் என்று இனி பார்ப்போம். தூக்கம் இயற்கையானது, இனிமையானது. தூக்கக் கிறக்கத்திலிருக்கும் ஒருவரிடம் `ஒரு கோடி ரூபாய் தருகிறேன், நீ தூங்கக்கூடாது’ என்று சொன்னால் `அய்யா சாமி ஆளை விடுங்க.

எனக்கு ஒரு கோடி ரூபாயும் வேண்டாம். ஒண்ணும் வேண்டாம். என்னைக் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க விடுங்க. அதுவே போதும்’ என்று தான் சொல்வார். அந்த அளவுக்கு தூங்குவதில் சந்தோஷமும் சுகமும் இருக்கிறது. தூக்கத்தின் பல்வேறு நிலைகளை கண்டுபிடிப்பதற்கும், கணக்கிடுவதற்கும் இ.இ.ஜி., இ.டி.ஜி., இ.எம்.ஜி. ஆகிய மூன்று டெஸ்ட்டுகள் செய்யப்படுகின்றன.
இதில் இ.இ.ஜி என்பது மூளையின் செயல்பாட்டைக் கண்டுபிடிப்பது, இ.டி.ஜி. என்பது தூங்கும்போது கண்களின் அசைவைக் கண்டுபிடிப்பது, இ.எம்.ஜி. என்பது உடலிலுள்ள தசைகளின் செயல்பாட்டைக் கண்டுபிடிப்பது. தூங்கும் நேரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒருவரின் வயதையும், அவருடைய தனித்தன்மையையும் பொறுத்து தூங்கும் நேரம் மாறுபடும்.
கொஞ்ச நேரம் தூங்கினாலே போதும் என்று சிலர் நினைப்பதுண்டு. இந்தக் குறைவான நேர தூக்கம் போதுமா, போதாதா என்று எப்படி முடிவு பண்ணுவது? ஒருவர் குறைவான நேரம் தூங்கினாலும், தேக ஆரோக்கியத்தோடு உடலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறாரென்றால் அவருக்கு குறைவான நேர தூக்கம்போதும் என்று ஒத்துக்கொள்ளலாம்.

ஆனால் தேக ஆரோக்கியம் சரியில்லை, உடம்பில் பல பிரச்சினைகள் உண்டாகிறது என்றால் அவருக்கு குறைவான நேர தூக்கம் போதவில்லை என்றுதான் அர்த்தம். இரவுப் பணிகளில் இருப்பவர்களுக்கு பகலில் நன்றாகத் தூங்கினால் தான் ஓரளவு நிம்மதியாக இருக்கும். சிலருக்கு அவர்கள் பார்க்கும் வேலையைப் பொறுத்து இரவில் சுத்தமாக தூங்க முடியாமல் போய் விடுகிறது.
அதிக நேரம் தூங்குவதற்கு நிறைய விஷயங்கள் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. தேகப்பயிற்சியும், சத்தாண உணவும் எப்படி ஒரு மனிதன் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் வாழத் தேவையோ, அதுபோல நல்ல தூக்கமும் ஒரு மனிதன் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழக் கண்டிப்பாக தேவை. நன்றி : http://easy-how-to-do.blogspot.in/2014/12/blog-post_17.html

No comments:

Post a Comment