Saturday, December 10, 2016

சுக்கு - மல்லி காபி - சளி, தொண்டை வலிக்கு

சளி, தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மல்லி காபியை குடிக்கலாம். மேலும் இந்த காபி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும்.
சளி, தொண்டை வலிக்கு சுக்கு - மல்லி காபி

தேவையான பொருட்கள் :  
தனியா - 150 கிராம்,
சுக்கு - 50 கிராம்,
மிளகு - 10 கிராம்,
திப்பிலி - 10 கிராம்,
சித்தரத்தை - 10 கிராம்,
பனை வெல்லம் அல்லது கருப்பட்டி - தேவையான அளவு.

செய்முறை : 

* பனை வெல்லம் அல்லது கருப்பட்டி நீங்கலாக  மற்ற பொருட்களை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் நைஸாக பொடித்து கொள்ளவும். இந்தப் பொடியை காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

* தேவையான போது ஒரு டம்ளர் தண்ணீருக்கு இரண்டு டீஸ்பூன் பொடி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, இறக்கி வடிகட்டினால்... மணமான மல்லி காபி ரெடி!

குறிப்பு: சித்தரத்தையை நன்கு தட்டி உடைத்த பின் வறுக்கவும். நன்றி : மாலைமலர் பதிவு: டிசம்பர் 10, 2016 08:56

No comments:

Post a Comment