Tuesday, August 29, 2017

முக்குரட்டை கீரை-நீரிழிவு மற்றும் மன அழுத்ததிற்கு அருமருந்து.....

நீரிழிவுக்கு அருமருந்து
உடலில் இன்சுலினானது கணையத்தில் உள்ள β-cellகளில் உற்பத்தி ஆகிறது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளில் இந்த β-cells குறைந்து விடுவதால் சர்க்கரை அதிகமாக இரத்த்தில் காணப்படுகிறது. முக்குரட்டை கீரையை உணவில் 4 வாரங்கள் சேர்த்தால் β-cells எண்ணிக்கையை குறையாமல் காக்கிறது. இதனால் அவர்களில் உடல் மேலும் பாதிப்படையாது. சர்க்கரை அளவும் கணிசமாக குறைகிறது. 
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் இக்கீரையின் இலைச்சாற்றைப் பருகினால் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் அட்ரினல் சுரப்பியின் செயல்பாட்டை சீராக்கி மனப்பதட்டத்தைக் குறைக்கிறது.
இதன் இலைச்சாறு வைரஸ் மற்றும் பாக்டீரியத் தொற்றுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் பெற்றுள்ளது. உடலில் ஏற்படும் கட்டிகள் உள்ளுறுப்புகளில் ஏற்படும் இரணத்தை ஆற்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
கல்லீரலில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து கல்லீரலைக் காக்கிறது. 
பெண்கள் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் மார்பக புற்றுநோய் கட்டிகள் உண்டாகாமல் தடுக்கலாம்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டோரின் நுரையீரலை வலுப்படுத்தி நோய்த்தீவிரத்தைக் குறைக்கிறது.
இரத்தம் உறைதலில் இக்கீரை பெரும்பங்காற்றுகிறது. சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது.
மூலம் : இளைய பல்லவன் - நாட்டு மருந்து 

No comments:

Post a Comment