Friday, August 18, 2017

விளாம்பழம்

தெய்வத்தை மிஞ்சிய சக்தியும் இல்லை தெய்வகனி விளாம்பழத்திற்க்கு மிஞ்சிய மருந்தும் இல்லை 
விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். 
இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. 

இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். 
Image may contain: food and text
பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வியர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப் படுத்தும். 
விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும்.
அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. 
முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் சாப்பிட ஏற்றது.
நன்றி : சங்கர் குரு 

No comments:

Post a Comment