Wednesday, August 30, 2017

மூக்கடைப்பு பிரச்சனைக்கு

நீங்கள் இரவில் மூச்சு விட முடியாமல் மூக்கு அடைப்பால் கஷ்டப்படுபவராயின், உங்களுக்காக இங்கு மூக்கடைப்பை சரிசெய்யும் எளிய இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
• சிறிது பட்டையை எடுத்து பொடி செய்து, நீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, உச்சந்தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவது குறையும்.
• ஆகாயத்தாமரை மற்றும் ஆதொண்டை வேரை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தலைக்கு தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளித்து வந்தால், மூக்கடைப்பு மற்றும் தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.
• நொச்சி இலைகளை அரைத்து சாறு எடுத்து, நல்லெண்ணெயில் சேர்த்து சூடேற்றி, பின் அதனை தலைக்கு தடவி குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

நாட்டுக் கம்பு:


நம் முன்னோர்கள், தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல், வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில், இந்த தானிய வகைகளை மறந்து, சத்தற்ற உணவுகளை, சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால், நோய்களின் வாழ்விடமாக, நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில், வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது, அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாக காய்ச்சி, காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். 

Tuesday, August 29, 2017

பீன்ஸ்

இன்றைய தலைமுறையினர் காய்கறிகளை சரியாக சாப்பிடாமல் ஜங்க்ஃபுட் உணவுகளை மட்டும் அதிகம் உட்கொள்வதால் அவர்களின் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, இதன் மூலம் அடிக்கடி நோய்வாய்படுகின்றனர்.
மேலும் வீட்டில் உள்ளோர் எவ்வளவுதான் காய்கறிகளை வாங்கி நன்கு சமைத்துக் கொடுத்தாலும், அதை சாப்பிடுவதில்லை. குறிப்பாக பீன்ஸ் பொரியல் என்றால் பலர் சாப்பிடாமலேயே இருப்பார்கள்.
புற்றுநோயை‌த் தடுக்கும்:
பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோ‌ய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.

நித்திய கல்யாணி-சக்கரை வியாதி புண்ணை ஒரே நாளில் குணமாக்கும்.

நித்திய கல்யாணி செடி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நித்திய கல்யாணி சர்க்கரை அளவை குறைக்க கூடிய தன்மை உடையது. புற்றுநோய்க்கு மருந்தாக அமைகிறது.
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லது. புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது.
நித்திய கல்யாணி பூவை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து தயாரிக்கலாம்.

முக்குரட்டை கீரை-நீரிழிவு மற்றும் மன அழுத்ததிற்கு அருமருந்து.....

நீரிழிவுக்கு அருமருந்து
உடலில் இன்சுலினானது கணையத்தில் உள்ள β-cellகளில் உற்பத்தி ஆகிறது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளில் இந்த β-cells குறைந்து விடுவதால் சர்க்கரை அதிகமாக இரத்த்தில் காணப்படுகிறது. முக்குரட்டை கீரையை உணவில் 4 வாரங்கள் சேர்த்தால் β-cells எண்ணிக்கையை குறையாமல் காக்கிறது. இதனால் அவர்களில் உடல் மேலும் பாதிப்படையாது. சர்க்கரை அளவும் கணிசமாக குறைகிறது. 
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் இக்கீரையின் இலைச்சாற்றைப் பருகினால் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அல்சரை போக்கும் விளாம்பழம்

 வுட் ஆப்பிள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விளாம்பழத்தில் புரதம் மற்றும் வைட்டமின் சி சத்தும், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன.
இந்த விளாம்பழம் மற்றும் அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவற்றிலும் மருத்துவ குணம் உள்ளது.
குறிப்பாக விளாம் பழ விதையில் ஒலியிக், பால்மிடிக், சிட்ரிக் உள்ளிட்ட அமிலங்களும், இலையில் சபோரின், வைடெக்சின் உள்ளிட்ட வேதி பொருட்களும், பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு உள்ளிட்ட மருத்துவ குணங்களும் உள்ளது. விளாங்காயில் பி2 உயிர்சத்தும் உள்ளது.

Sunday, August 27, 2017

மூட்டு வலி நிவாரணம் தரும் முடக்கத்தான் ரசம்

மூட்டு வலியில் இருந்து நிவாரணம் தரும் வல்லமை பெற்றது முடக்கத்தான் கீரை. இந்த கீரையை வைத்து சூப்பரான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடியளவு,
புளி - நெல்லியளவு,
உப்பு - தேவைக்கு
பூண்டு - 5 பல்,
காய்ந்த மிளகாய் - 3, 
மஞ்சள் தூள் - சிட்டிகை
மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
நெய், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.