Tuesday, September 5, 2017

எளிய பாட்டி வைத்தியம் :-

1) கேழ்வரகு மாவு, எள்ளு, சிறிது வெள்ளம் சேர்த்து இடித்து சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
2) மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து பருகினால் வயிற்று வலி,வாயுத் தொல்லை நீங்கும்.
3) சீரகம், திப்பிலி சேர்த்து பொடி செய்து தேனில் குழைத்து அடிக்கடி சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.
4) ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்று போக்கு குணமாகும்.
5) பலாப்பழத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி உற்சாகம் ஏற்படும்.

6) திப்பிலியை நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் இருமல் நீங்கும்.
7) வெங்காயம் பச்சையாக சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீர்படும்.வழக்கமாக வெங்காயத்தை உணவில் சேர்த்தால் உடலுக்கு நல்லது.
8) பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச் சோர்வு நீங்கும்.
9) மாங்காய் பறிக்கும் போது அதன் காம்பிலிருந்து வழியும் பாலை தேனீ கொட்டிய இடத்தில் தடவினால் உடனடி நிவாரணமளிக்கும்.
மூலம் : பாலு முருகன் - நோயற்ற வாழ்வு 

No comments:

Post a Comment