Saturday, September 2, 2017

நெருஞ்சில்

சிறுநீர் சீராக நெருஞ்சில்
பல பயன்களை தரும் நெருஞ்சில் ஒரு வீரியமுள்ள மூலிகை சமஸ்கிருதத்தில் இதன் பெயர் 'கோக்சூரா' - இதன் முட்கள் மாட்டின் கொம்பைப் போல் பிரிவுடையவை.
இதன் பழங்கள் மாட்டின் குளம்புகளை போல் பிரிவுடையவை. தரையில் படரும் முட்செடி. மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும்.
கிளைகள் வளைந்து நெளிந்து செல்லும். பட்டு போன்ற முடிகளால் கிளைகள் மூடப்பட்டு இருக்கும். தண்டு, இலைகள் பழங்கள் இவற்றில் எல்லாம் முட்கள் இருக்கும். இதனால் தமிழில் இதற்கு நெருஞ்சி முள் என்றும் பெயர்.
பூக்கள் மஞ்சள் நிறமாயிருக்கும்.
நெருஞ்சிலில் சிறுநெருஞ்சில், பெரு நெருஞ்சில் அல்லது யானை நெருஞ்சில் என்னும் பிரிவகளுண்டு. நெருஞ்சிலுக்கு யானை வணங்கி என்ற மற்றொரு பெயருமுண்டு. இந்த பிரிவுகள், குணத்தில் மாறுபாடு இல்லை.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே ஆயுர்வேதத்திலும், சீன வைத்தியத்திலும் நெரிஞ்சில் உபயோகிக்கப் பட்டிருக்கிறது. சீனாவில் இந்த மூலிகையை, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், சோரியாஸிஸ் எக்சிமா போன்ற சர்ம நோய்களுக்கும், விந்து முந்துதல் (Pre-mature ejaculation), மற்றும் இதயம், ரத்தநாள பாதிப்புகளுக்கும், மருந்தாக பயன்படுத்துகின்றனர். பல்கேரியாவில் பாலியல் வேட்கையை அதிகரிக்கவும், குழந்தையில்லா குறைபாட்டை போக்கவும் நெருஞ்சி பயன்படுத்தப்படுகிறது.
Image may contain: flower, plant, nature and foodகிரேக்கர்களும் நெருஞ்சிலை சிறுநீர் சுலபமாக பிரியவும், மனநிலை (Mood) மாறவும் உபயோகித்தனர்.
தாவரவியல் பெயர்: Tribulus Terrestris
குடும்பம்: Zygophyllaceae
இதர பெயர்கள்: சமஸ்கிருதம் - கோக்சுரா
இந்தி: கோக்ரூ / காக்ரூ, ஆங்கிலம் - Caltrops
தமிழில் இதர பெயர்கள்: திரிகண்டம், கோகண்டம், நெருஞ்சி புதும், காமரசி

பயன்படும் பாகங்கள்: செடி முழுமையும்
பொதுவான குணங்கள்:
சிறுநீர் பெருக்கி, ஆண்மை பெருக்கி, உடலுக்கு வலிமை தரும் 'டானிக்', குளிர்ச்சி உண்டாக்கும், உள்ளழலாற்றும்.
நெருஞ்சில் மருத்துவ குணம்
1. இதன் முக்கிய பயன் சிறந்த சிறுநீர் பெருக்கி ஆயுர்வேத ஆசான் சரகர் நெருஞ்சிலை சிறந்த ஐந்து சிறுநீர் பெருக்கும் மூலிகைகளில் ஒன்றாக சொல்லுகிறார்.
2. சிறுநீரக பாதையில் ஏற்படும் வலிகளுக்கு பாலில் கொதிக்க வைத்த நெருஞ்சில் கஷாயம் நல்லது.
3. பொடிக்கப்பட்ட நெருஞ்சில் விதைகளுடன் தேனும், ஆட்டின் பாலும் கலந்து குடிக்க சிறுநீரக கற்கள் நீங்கும். சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் எரிச்சலுக்கு, தனியா விதைகளுடன் நெருஞ்சில் சேர்த்து செய்யப்பட்ட கஷாயம் நிவாரணமளிக்கும்.
சிறுநீரக கோளாறுகளுக்கு நெருஞ்சில் நல்ல மருந்து. சிறுநீரகப் பாதைகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அநூரியா (Anuria) எனும் சிறுநீர் வராமல் போகும் நோய்க்கு, நெருஞ்சில் சேர்ந்த கோக்சூராதி க்ருதம் (மூலிகை சேர்த்த நெய்) நல்ல மருந்து.
நெருஞ்சில் நீரிழிவு நோயை எதிர்க்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு தரப்படும் மருந்தில் ஒன்று.

ஜனன உறுப்புக்களின் செயல்பாட்டை சீராக்கி, ஆண், பெண் இருவருக்கும் பாலியல் உணர்வை தூண்டுகிறது. சதவாரி, அஸ்வகந்தா, இவற்றுடன் சேர்ந்து, பெண்களின் கர்பப்பை (Uterus) பாதிப்புகளுக்கு மருந்தாகும். ஆண்களின் ஆண்மையை பெருக்குகிறது. ஆண்மை குறை தீர, நெருஞ்சிலை தேனுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாலியல் நோய்களான கொனோரியா (Gonorrhoea) போன்றவற்றுக்கும் நெருஞ்சில் அருமருந்து. ஆண் ஹார்மோனான Testosterone உற்பத்திக்கு காரணமான Luteinizing hormone களை ஊக்குவிக்கிறது. இதனால் உடல் இளமையாக இருக்க உதவுகிறது.
30 நாட்கள் நெருஞ்சிலை உட்கொண்டு வர, ஆண்மலட்டுத்தன்மை நீங்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
• நெருஞ்சில் வாதத்தையும், கபத்தையும் குறைக்கும். பசியை தூண்டும் வயிற்றுக்கோளாறுகளை போக்கும்.
• மலச்சிக்கல், மூலவியாதிகளுக்கு நெருஞ்சில் பயன்படுகிறது.

• நெருஞ்சில் கஷாயத்துடன் சுக்கு சேர்த்து காலையில் பருகினால் ரூமாட்டிஸம், இடுப்பு வலி குறையும்.
• நெருஞ்சில் இதயத்திற்கு நல்லது. ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து சீராக இரத்த ஒட்டம் இயங்க உதவும்.
நெருஞ்சிலால் செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகள்
1. கோக்சுரா அவலேஹம்
2. கோக்சுரா க்ருதம்
3. கோக்சுரா க்வாதம்
4. கோக்சுரா குக்குலு முதலியன.

செய்முறை:
10 கிராம் கருப்பு எள் மற்றும் 10 கிராம் நெருஞ்சி முள் ஆகிய இரண்டையும் எடுத்து 250 மி.லி தண்ணீரில் கலந்து ஊற வைத்து கொள்ளவும். தினமும் 2 முறை இந்த நீரை குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வெளிப்படாதது குறைந்து இயல்பான முறையில் இரத்தப்போக்கு ஏற்படும்.
கருப்பு எள் மற்றும் நெருஞ்சி முள் ஆகிய இரண்டையும் எடுத்து தண்ணீரில் கலந்து ஊற வைத்து கொள்ளவும். தினமும் 2 முறை இந்த நீரை குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வெளிப்படாதது குறைந்து இயல்பான முறையில் இரத்தப்போக்கு ஏற்படும்
குழந்தை வரம் தரும் நெருஞ்சி
சாலை ஓரங்களிலும், விளை நிலங்களிலும் களைச்செடியாக முளைத்திருக்கும் நெருஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்குவதோடு, ஆண்களின் ஆண்மையை பெருக்கி குழந்தை வரம் தரும் அற்புத மூலிகை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை வரம் தரும் நெருஞ்சி நெருஞ்சியின் மருத்துவ குணம் பற்றி சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருஞ்சி இலையில், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. இது பாலியல் பிரச்சினைகளையும், சிறுநீர் கோளாறுகளையும் நீக்கும் அருமருந்தாக உள்ளது. இதன் மருத்துவகுணம் பண்டைய கிரேக்க நாடுகளிலும், சீனா, வியட்டநாம், போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது.
பெண்களுக்கு நிவாரணம் நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூப்படையாத பெண்கள் பூப்பெய்துவர்.
நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக காய்ச்சி தினசரி சிறிதளவு சாப்பிட்டு வர பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்குவதோடு குழந்தை பேறு உண்டாகும்.
நெருஞ்சி செடியை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 2 கிராம் அளவு பாலுடன் கலந்து காலை மாலை இருவேளை குடித்து வர வெட்டை நோய் குணமாகும்.
ஆண்மை பெருக நெருஞ்சி முள்ளை சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை மாலை இருவேளைகள் அருந்தி வர வீரிய விருத்தி உண்டாகும், ஆண்மை பெருகும்.

நெருஞ்சி இலையை வெள்ளாட்டு பாலுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்து குடித்துவர ஆண்மை அதிகரிக்கும்.
சிறுநீர் கோளாறுகள்
விவசாயிகளுக்கும் பாதங்களுக்கும் எதிரியான நெருஞ்சி முள், சிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும்.

சிறுநீரகக் கோளாறு, சிறுநீரகக் கல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும்.
ரத்த சுத்திக்கும், சிறுநீர் தடையின்றி போவதற்கும் மருந்து தயாரிக்கப்படுகிறது.

கர்ப்பிணி பெண்கள், நெருஞ்சி முள்ளை சுடுநீரில் கொதிக்க வைத்து கசாயமாக உட்கொண்டால் சிறுநீர் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
சிறுநீர் பாதையில் எரிச்சலோ, வலியோ காணப்பட்டால் நெருஞ்சி செடியுடன் நித்யகல்யாணி பூ சம எடை எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி பாலும் சர்க்கரையும் சேர்த்து காலையில் மட்டும் குடித்துவர அந்த பாதிப்பு குணமாகும்.
சிறுநீரக கல் அடைப்பு நெருஞ்சி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர சிறுநீரில் ரத்தம் வெளிப்படுதல் குணமாகும்.
சிதைத்த நெருஞ்சி முள் 50 கிராம், கொத்தமல்லி 5 கிராம், ஆகியவற்றை எடுத்து அவற்றுடன் நீர் சேர்த்து காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி 60 மில்லி அளவு காலை மாலை இருவேளை குடித்துவர கல் அடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு, நீர் எரிச்சல் போன்ற சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
நெருஞ்சி விதை, மற்றும் வெள்ளரி விதை இவையிரண்டையும் சம அளவு எடுத்து பொடிசெய்து வைத்துகொண்டு அதில் 2 கிராம் அளவு எடுத்து இளநீரில் கலந்து உட்கொண்டுவர கல் அடைப்பு நோய் குணமாகும்.
கண் எரிச்சல் குணமடையும் உடல் சூடு காரணமாக சிலருக்கு கண் எரிச்சல் ஏற்படும். அவர்கள் நெருஞ்சி செடி மற்றும் அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அதை மண் சட்டியிலிட்டு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவர கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல், உடல் உஷ்ணம் போன்றவை குணமாகும்.
மஞ்சள் காமாலைக்கு நிவாரணம் நெருஞ்சி வேர் கீழாநெல்லி வேர் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து இளநீரில் கலந்து குடித்துவர மஞ்சள் காமாலை நோய் தணியும்.
இதனை அரைத்துச் சாறு பிழிந்து குடித்தால் சிறுநீருடன் இரத்தம் கசிவது நிற்கும்.
விதையினை அவித்துக் காயவைத்துத் தூளாக்கி இளநீருடன் உட்கொண்டால் சிறுநீர் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
இது வெள்ளைபடுதலுக்கான மருந்தாக கீழாநெல்லியுடன் சம அளவு சேர்த்துத் தயிரிற் கலந்து உண்ணப்படுகிறது
10 கிராம் கருப்பு எள் மற்றும் 10 கிராம் நெருஞ்சி முள் ஆகிய இரண்டையும் எடுத்து 250 மி.லி தண்ணீரில் கலந்து ஊற வைத்து கொள்ளவும். தினமும் 2 முறை இந்த நீரை குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வெளிப்படாதது குறைந்து இயல்பான முறையில் இரத்தப்போக்கு ஏற்படும்.
மூலம் : ராஜ் குமார் .A 

No comments:

Post a Comment