Saturday, September 9, 2017

வாயு தொல்லையை குணமாக்கும் பூண்டு லெமன் டிரிங்.

​வாயு தொல்லை, வயிறு கோளாறு இருப்பவர்கள் இந்த பூண்ட லெமன் டிரிங்கை குடித்தால் உடனடியாக நிவாரணம் பெறலாம்.
​தேவையானவை :​
பூண்டு - 3 பல்,
எலுமிச்சைச் சாறு - 4 டீஸ்பூன்,
தேன் - சிறிதளவு,
தண்ணீர் - ஒரு கப்.

​செய்முறை :​
👁‍🗨 பூண்டை நன்றாக தட்டி வைக்கவும்.
👁‍🗨 அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் பூண்டை சேர்த்து கொதிக்க விடவும்.
👁‍🗨 நன்றாக கொதித்து பூண்டு சாறு இறங்கியதும் இறக்கி வடிகட்டவும்.
👁‍🗨 வடிகட்டிய பூண்டு சாறுடன் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து பருகலாம்.
​சூப்பரான பூண்டு லெமன் டிரிங் ரெடி.​
மூலம் : பத்மாவதி - அறுசுவை சமையல் சைவம்  

No comments:

Post a Comment