Thursday, September 7, 2017

உணவு உண்ணாமல் அடம்பிடிக்குதா உங்கள் சுட்டிகள்!

உணவு உண்ணாமல் அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குச் சிலர் ஜூஸ் கொடுப்பார்கள். ஆனால், நேரம் காலம் தெரியாமல் எந்த ஜூஸை எப்போது கொடுக்க வேண்டும் என்பது புரியாமல் இருப்பார்கள். நெஞ்சுச்சளி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு, ஜூஸ் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற சில வரைமுறைகள் உள்ளன. வளர்ச்சி குன்றிய குழந்தைக்கு ஆப்பிள் ஜூஸ் தருவது, மலச்சிக்கல் உள்ள குழந்தைக்குத் திராட்சை, வாழைப்பழம் ஜூஸ் தருவது என யாருக்கு எந்த ஜூஸ் தரலாம். குழந்தைகளுக்கு 10-வது மாதத்திலிருந்து பழச்சாறுகள் கொடுக்கலாம். காலை நேரங்களில் ஒரேமாதிரியான பழச்சாறுகள் கொடுப்பதைத் தவிர்க்கலாம். மேலும், சீசன் பழங்களான வாழை, அன்னாசி, முலாம், தர்பூசணி, கிவி போன்றவற்றை மாறிமாறிக் கொடுக்கலாம். இரவு நேரங்களில் சிட்ரிக் ஆசிட் நிறைந்த பழச்சாறுகளைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.https://nammaveettusamayal.blogspot.in/2017/09/blog-post_48.html#more

No comments:

Post a Comment