Wednesday, February 11, 2015

குப்பைமேனி

பயன்கள்
1. வயிற்றுப்பூச்சிகளை வெளியேற்ற - குப்பைமேனி செடியை வேருடன் எடுத்து, செடியை (வேர் உள்பட) நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி உலர வைக்க வேண்டும். இதில் ஒரு கைப்பிடி எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி, ஆற வைத்து வடிகட்டவும்.
அதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், பேதியாகி, மலத்துடன் வயிற்றுப்பூச்சிகள் வெளியேறும். சிறுவர்களுக்கு பாதி அளவு கொடுத்தால் போதும். சித்த வைத்தியத்தின் படி, இலைகளை சாறு பிழிந்தோ, குடிநீரிலிட்டோ சிறுவர்களுக்கு 1 முதல் 4 தேக்கரண்டி வரை கொடுக்கலாம். வெறும் இலைகளை பொடித்துக் கொடுத்தாலும், வயிற்று பூச்சி, புழுக்கள் வெளியேறும். குப்பைமேனி வேரை (50 கிராம்) எடுத்து, 200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக குடித்தால், நாடாப்பூச்சி போன்ற அனைத்து பூச்சிகளும் வெளியேறும்.
குப்பைமேனி :

பயன்கள்

1. வயிற்றுப்பூச்சிகளை வெளியேற்ற - குப்பைமேனி செடியை வேருடன் எடுத்து, செடியை (வேர் உள்பட) நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி உலர வைக்க வேண்டும். இதில் ஒரு கைப்பிடி எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி, ஆற வைத்து வடிகட்டவும். அதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், பேதியாகி, மலத்துடன் வயிற்றுப்பூச்சிகள் வெளியேறும். சிறுவர்களுக்கு பாதி அளவு கொடுத்தால் போதும். சித்த வைத்தியத்தின் படி, இலைகளை சாறு பிழிந்தோ, குடிநீரிலிட்டோ சிறுவர்களுக்கு 1 முதல் 4 தேக்கரண்டி வரை கொடுக்கலாம். வெறும் இலைகளை பொடித்துக் கொடுத்தாலும், வயிற்று பூச்சி, புழுக்கள் வெளியேறும். குப்பைமேனி வேரை (50 கிராம்) எடுத்து, 200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக குடித்தால், நாடாப்பூச்சி போன்ற அனைத்து பூச்சிகளும் வெளியேறும்.

2. மூலம், பௌத்திரம் நோய்களுக்கு - குப்பைமேனி, மூலம், பௌத்திரம் போன்ற ஆசனவாய் நோய்களுக்கு, பத்தியம் கூட தேவையில்லாத சிறந்த மருந்து என்கின்றனர் மூலிகை வைத்தியர்கள். பூக்கள் பூத்த, செழிப்பான செடிகளை, வேருடன் பறித்து சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி, வஸ்திரகாயம் செய்து, சூரணம் தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த சூரணத்தில் 2-5 கிராம் அளவு எடுத்து காலை, மாலை, 45 நாள் சாப்பிட்டு வர, மூலம், பௌத்திரம் குணமாகும். இந்த 48 நாட்களில் மோர், தயிர், நெய், அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது. பத்தியம் ஏதும் தேவையில்லை.

3. சுவாச மண்டல நோய்களுக்கு - இலைப்பொடி 950 மி.கி, 1500 மி.கி. வரை கொடுக்க இருமல் தணியும். சுவாச நோய்கள் குணமாக, குப்பைமேனி இலைச்சாற்றை வடிகட்டி, 4 தேக்கரண்டி வீதம் 7 நாட்கள் கொடுத்து வரலாம்.

4. படுக்கைப்புண்- ஆமணக்கு எண்ணையில், குப்பைமேனி இலையை வதக்கி, இளஞ்சூட்டுடன் வைத்துக்கட்டினால் ஙிமீபீ Bed sores எனப்படும், படுக்கைப்புண்கள் குணமாகும். குப்பைமேனி இலையை மென்மையாக அரைத்து, புண், காயங்களின் மேல் வைத்துக்கட்டினால் எந்த புண்ணும் குணமாகும். கூட மஞ்சளும் சேர்த்துக் கொள்ளலாம்.

5. வாய்வு, அஜீரணம், வயிற்று வலிக்கு- குப்பைமேனி இலைச்சாற்றுடன் சம அளவு உப்பைக்கரைத்து, அடுப்பில் வைத்து, சுண்டக் காய்ச்ச வேண்டும். உப்பு 'பூர்த்து' மிகுந்து விடும். இந்த உப்பை தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இந்த உப்பை 5 கிராம் அளவில் தினசரி இரு வேளை சாப்பிட்டு வர, வயிற்று - வாய்வு கோளாறுகள் நீங்கும்.

6. தலைவலி - இந்த செடியின் இலையை பொடி செய்து, மூக்கில் பொடி போல் இருக்க நீர் வடிந்து தலைவலி குணமாகும். ஆயுர்வேதத்தில் இதை 'நசியமிடுதல்' என்பார்கள்.

7. சர்ம நோய்களுக்கு - இலை, உப்பு, மஞ்சள் மூன்றையும் சேர்த்து அரைத்து, சொறி, சிரங்குகளுக்கு பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்து வர, குணமாகும். 
குப்பை மேனியை விஷக்கடிகளுக்கு பயன்படுத்தலாம். என்கின்றனர் சித்த வைத்தியர்கள்

"காந்தி மெயிலைக்கறி கனிவுடனயில் மெய்    யாந்திமிர் வாத நோயாதிகள் போய்விடும்."

"குப்பை மேனி இலையை, உணவு முறையாக பிரியமுடன் புசித்து வருபவரின் உடலிலுள்ள திமிர்வாதம் முதலிய நோய்கள் நீங்கும்" என்கிறது மேற்கண்ட சித்த வைத்திய பாடல்.2. மூலம், பௌத்திரம் நோய்களுக்கு - குப்பைமேனி, மூலம், பௌத்திரம் போன்ற ஆசனவாய் நோய்களுக்கு, பத்தியம் கூட தேவையில்லாத சிறந்த மருந்து என்கின்றனர் மூலிகை வைத்தியர்கள். பூக்கள் பூத்த, செழிப்பான செடிகளை, வேருடன் பறித்து சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி, வஸ்திரகாயம் செய்து, சூரணம் தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த சூரணத்தில் 2-5 கிராம் அளவு எடுத்து காலை, மாலை, 45 நாள் சாப்பிட்டு வர, மூலம், பௌத்திரம் குணமாகும். இந்த 48 நாட்களில் மோர், தயிர், நெய், அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது. பத்தியம் ஏதும் தேவையில்லை.
3. சுவாச மண்டல நோய்களுக்கு - இலைப்பொடி 950 மி.கி, 1500 மி.கி. வரை கொடுக்க இருமல் தணியும். சுவாச நோய்கள் குணமாக, குப்பைமேனி இலைச்சாற்றை வடிகட்டி, 4 தேக்கரண்டி வீதம் 7 நாட்கள் கொடுத்து வரலாம்.
4. படுக்கைப்புண்- ஆமணக்கு எண்ணையில், குப்பைமேனி இலையை வதக்கி, இளஞ்சூட்டுடன் வைத்துக்கட்டினால் ஙிமீபீ Bed sores எனப்படும், படுக்கைப்புண்கள் குணமாகும். குப்பைமேனி இலையை மென்மையாக அரைத்து, புண், காயங்களின் மேல் வைத்துக்கட்டினால் எந்த புண்ணும் குணமாகும். கூட மஞ்சளும் சேர்த்துக் கொள்ளலாம்.
5. வாய்வு, அஜீரணம், வயிற்று வலிக்கு- குப்பைமேனி இலைச்சாற்றுடன் சம அளவு உப்பைக்கரைத்து, அடுப்பில் வைத்து, சுண்டக் காய்ச்ச வேண்டும். உப்பு 'பூர்த்து' மிகுந்து விடும். இந்த உப்பை தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இந்த உப்பை 5 கிராம் அளவில் தினசரி இரு வேளை சாப்பிட்டு வர, வயிற்று - வாய்வு கோளாறுகள் நீங்கும்.
6. தலைவலி - இந்த செடியின் இலையை பொடி செய்து, மூக்கில் பொடி போல் இருக்க நீர் வடிந்து தலைவலி குணமாகும். ஆயுர்வேதத்தில் இதை 'நசியமிடுதல்' என்பார்கள்.
7. சர்ம நோய்களுக்கு - இலை, உப்பு, மஞ்சள் மூன்றையும் சேர்த்து அரைத்து, சொறி, சிரங்குகளுக்கு பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்து வர, குணமாகும்.
குப்பை மேனியை விஷக்கடிகளுக்கு பயன்படுத்தலாம். என்கின்றனர் சித்த வைத்தியர்கள்
"காந்தி மெயிலைக்கறி கனிவுடனயில் மெய் யாந்திமிர் வாத நோயாதிகள் போய்விடும்."
"குப்பை மேனி இலையை, உணவு முறையாக பிரியமுடன் புசித்து வருபவரின் உடலிலுள்ள திமிர்வாதம் முதலிய நோய்கள் நீங்கும்" என்கிறது மேற்கண்ட சித்த வைத்திய பாடல்.

No comments:

Post a Comment