Tuesday, February 10, 2015

உடல் எடையை குறைக்கும் இந்திய உணவு பொருட்கள்:-

உலகில் பெரும்பாலானோர் கஷ்டப்படும் பிரச்சினைகளில் ஒன்று தான் உடல் பருமன். இத்தகைய உடல் பருமனானது ஏற்படுவதற்கு அதிகப்படியான கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதால், கொழுப்புக்களானது உடலில் ஆங்காங்கே தங்கி, உடல் எடையை அதிகரித்து விடுகிறது.
மேலும் தற்போதைய வாழ்க்கை முறையில் உண்ணும் உணவுகள் அனைத்திலுமே கொழுப்புக்கள் அதிகம் இருக்கிறது. கடைகளில் விற்கப்படும் எந்த ஒரு உணவையும் ஆரோக்கியம் என்று கருதி சாப்பிட முடியாது. அதுமட்டுமல்லாமல், கடைகளில் கொழுப்பில்லாத உணவுகள் என்று குறிப்பிட்டு விற்கப்படும் உணவுகளில் தான் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது.
எனவே உடல் எடையை குறைக்க நினைப்போர், உணவுகளில் கவனமாக இருப்பவராக இருந்தால், இந்திய உணவுப்பொருட்கள் என்று சொல்லப்படும், வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே உடல் பருமனை எளிதில் குறைத்து விடலாம்.
மேலும் இந்த உணவுகள் உடல் எடையை குறைப்பதோடு, உடலை ஆரோக்கியமாக நோய்கள் எளிதில் தாக்காதவாறு பாதுகாக்கும். இப்போது உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும் சில இந்திய உணவுப் பொருட்களைக் கொடுத்துள்ளோம். அதைப்படித்து முயற் சித்து, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
மஞ்சள் : இந்திய உணவுகள் அனைத்திலும் சேர்க்கப்படும் மஞ்சுள் தூளில், உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும் சக்தியானது உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைத்தால், மஞ்சள் தூளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.
பூண்டு : அனைவருக்குமே பூண்டு சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரியும். ஏனெனில் பூண்டில் அல்லிசின் என்றும் கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள் இருப்பதால், உடலில் கொலஸ்ட்ரால் தங்குவது தடைபட்டு, இதயம் ஆரோக்கியமாக இருப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
மிளகாய் : உடலில் உள்ள கொழுப்புக் களை கரைப்பதில் மிளகாய் மிகவும் சிறப்பான பொருள். ஏனென்றால், அதில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை தங்க விடாமல் செய்கிறது. இதனால் உடல் எடையும் அதிகரிக்காமல் இருக்கிறது.
முட்டை : தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால், அதிலிருந்து உடலுக்கு வேண்டிய புரோட்டீன், கொழுப்பு மற்றும் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் போன்றவை கிடைத்து, எனர்ஜி மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்து, உடல் எடை குறையும்.
எலுமிச்சை : இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் சாப்பிடக் கூடிய உணவுப் பொருள் தான் எலுமிச்சை. இத்தகைய எலுமிச்சையை தினமும் ஜுஸ் போட்டு குடித்து வந்தால், நிச்சயம் உடல் எடை சரியான அளவில் இருக்கும்.
பட்டை : பட்டையை உணவில் சேர்த்தால், கொழுப்புக்கள் அதிகம் சேராமல் உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
காபி : காபியை குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, கொழுப்புக்கள் கரையும். எனவே தினமும் 2 கப் காபி குடிப்பது நல்லது. குறிப்பாக காபியை அளவுக்கு அதிகமாக குடித்தால், உட லுக்கு கேடுதான் விளையும்.
முட்டைகோஸ் : பெரும்பாலான இந்திய சாலட்டுகளில் முட்டைகோஸா னது பச்சையாக சேர்க்கப் படும். இவ்வாறு முட்டை கோஸை பச்சையாக சாப்பி டுவதும் மிகவும் நல்லது. ஏனெனில் பச்சையாக முட்டை கோஸை சாப்பிட்டால், சர்க்கரையின் அளவு கட்டுப்படுத் தப்படுவதோடு, கார்போட் ஹைட்ரேட் கொழுப்புக்களாக மாறாமல் இருக்கும்.
வாழைப்பழம் : வாழைப்பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு எனர்ஜி கிடைப்ப தோடு, அதிகப்படியான நார்ச்சத்தும் கிடைக்கும். மேலும் இது எடை குறைவுக்கும் வழி வகுக்கும்.
தக்காளி : தினமும் சமையலில் சேர்க்கப்படும் தக்காளியை அதிகம் சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதனால் தேவையில்லாத கொழுப்புக்கள் உடலில் சேர்வதை தடுக்கலாம்.
கடுகு எண்ணெய் : சமையலில் கடுகு எண்ணெயை பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக் கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, ஒல்லியாகவும் வைத்திருக்க உதவும்.
மோர் : இந்தியாவில் குடிக்கப்படும் ஸ்பெஷல் பானங்களில் ஒன்று தான் மோர். இந்த மோர் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, குறைவாக கலோரிகளைக் கொண்டது. அதிலும் இதில் உள்ள சிட்ரிக் எசன்ஸ், கொழுப்புக்களை கரைக்க உதவியாக இருக்கும்.
ஆப்பிள் : ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருப்பதோடு, இதனை சாப்பிட்டால், உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உதவிபுரியும்.
பாசிப்பருப்பு : பாசிப் பருப்பில் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், அது கொலஸ்ட்ரால் பிரச்சினையை எதிர்த்துப் போராடும் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களை உடலுக்கு தருகிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை அதிகம் உட்கொள் வது மிகவும் சிறந்தது.
தேன் : தேன் இந்தியாவில் மட்டு மின்றி உலகம் முழுவதும் சுவைக்காக உணவில் பயன்படுத்தும் ஒரு பொருள். ஆனால் இந்த உணவுப் பொருள் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளின் சமையலறையிலும்  இருக்கக்கூடியது. ஆகவே எடை குறைய வேண்டுமெனில், சர்க்கரைக்கு பதிலாக தேனைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
தயிர் : குறைந்த அளவு கொழுப் புள்ள தயிரில் கலோரிகள் குறைவாகவும், சிட்ரிக் ஆசிட் அதிகமாகவும் இருப்பதால், உடல் எடை குறைவிற்கு வழி வகுக்கும். மேலும் தயிரும் செரிமான பிரச்சினையை சரிசெய்து, உடலின் மெட்ட பாலிசத்தை அதிகரிக்கும்.
கறிவேப்பிலை : இந்தியாவில் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொதுவான மூலிகை தான் கறிவேப்பிலை. இத்தகைய கறிவேப்பிலையில் கொழுப்புக்களை கரைக்கும் பொருள் அதிகம் நிறைந்திருக்கிறது. ஆகவே எடை குறைய வேண்டுமெனில் சாப்பிடும் போது, உணவில் உள்ள கறி வேப்பிலையை தூக்கி எறியாமல், அதனை சாப்பிட தொடங்குங்கள்.
க்ரீன் டீ : தற்போது நிறைய மக்கள் உடல் எடையை குறைப்பதற்கு க்ரீன் டீயை குடித்து வருகின்றனர். ஆனால் அந்த க்ரீன் டீயை அளவுக்கு அதிகமாக குடிக்கக்கூடாது.
மாதுளை : மாதுளையில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்புக்களை கரைக்கும் பொருள் அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு மாதுளையை சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, பிட்டாக இருக்கலாம்.
ஏலக்காய் : சமையலில் சுவைக்காகவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படும் ஏலக்காய், உடல் எடை குறைவதற்கும் பயன்படுகிறது.

No comments:

Post a Comment