Friday, February 6, 2015

அவித்த முட்டை ஆனியன் குழம்பு"

தேவையான பொருட்கள் :
இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, மிளகு தூள், தனியா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், முட்டை, எண்ணெய், 
செய்முறை :
===============================
1. முதலில் வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும்.
2. முட்டையை அவித்து உரித்து வைத்துக் கொண்டு, முட்டையில் சிறிய கீரல் போட்டுக் கொள்ளவும்.
3. பிறகு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் இஞ்சி, கருவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயத்தை சேர்த்து பொன்நிறம் வரும் வரை வதக்கவும்.
4. பின் மிக்சியில் அரைத்து வைத்துள்ள தேங்காயை, வதங்கிய பொருளுடன் சேர்த்து நன்றாக கலக்கி, மிளகு தூள், தனியா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
5. பிறகு அதனுடன் பால் சிறிதளவு சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்த பின் முட்டையை அதில் சேர்த்து, இறுதியில் கொத்தமல்லி தழையை தூவி கொதிக்கவிட்டு இறக்கவும். இப்பொழுது சுவையான அவித்த முட்டை ஆனியன் குழம்பு ரெடி.

No comments:

Post a Comment