Thursday, February 12, 2015

முடி வளர

எவ்வளவு கஷ்டப்பட்டவது முடி வளர்க்கவேண்டும் என்றும் அதனை பாதுகாக்க பல ஆங்கில மருத்துவ முறைகளை பின்பற்றுவார்கள் நம் இளசுகள்.பக்க விளைவுகள் ஏற்படுத்தும் ஆங்கில மருந்துகள் எதற்கு?? நம் இயற்கையே நமக்கு நல்ல மருந்துதான். நம் முடியை பாதுகாக்க இயற்கை பல வழிகளை கொண்டுள்ளது.அவற்றில் ஐந்தே ஐந்தை மட்டுமே நாம் இன்று ஹெல்த் டிப்ஸ் பகுதியில் பார்க்கப் போகின்றோம்.
நெல்லிக்காய்:
நெல்லிக்காய் முடி வளர்ச்சிக்கு நன்கு துணைபுரியும். ஒரு நெல்லிக்காயை துண்டுகளாக நறுக்கி, அவற்றை நன்கு நசுக்கி சாறு எடுத்து உங்கள் மயிரிழைகளில் தடவி மசாஜ் செய்து வர, உங்கள் முடி செழித்து வளரும் மிகவும் ஷைனிங்காகவும் இருக்கு.
இஞ்சி:
இஞ்சியும் முடி வளர்ச்சியில் அதிக பங்கு வகிக்கின்றது. தினமும் இஞ்சிய சாறு எடுத்து தலையில் மசாஜ் செய்து வர முடி வளர்ச்சி கண்கூடாக தெரியும்.
கருவேப்பிலை:
முடி வளர்ச்சியை தூண்டுவதில் கருவேப்பிலைக்கு அதீத பங்குண்டு. சிறிது கருவேப்பிலையை எடுத்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு நன்கு வேகவைக்கவும். பின்னர் அது குளிர்ந்ததும். அதனுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து தினசரி தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
எண்ணெய் மசாஜ்:
வாரம் ஒரு முறை தலை முடிக்கு எண்ணெய் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. தேங்காய் எண்ணெய், பாதம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் என எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து தலைமுடியில் நன்கு மசாஜ் செய்வது உங்கள் முடிக்கு மிக மிக நல்லது.
செம்பருத்தி:
செம்பருத்தி மிக மிக நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. செம்பருத்தி பூவை இலையுடன் சேர்த்து நசுக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து விடவும். இரவில் இதனை தலையில் தடவி காலை குளித்து வர முடி நன்கு ஊட்டம் பெறும். இது உங்கள் முடி நரைப்பதைத் தடுக்கின்றது. மேலும் முடியின் வேர் வரை சென்று உதிர்வதைத் தடுக்கின்றது.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் எளிதில் கிடைக்கக் கூடிய ஒன்றுதான். உங்கள் முடியை பாதுகாக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றது. கவலை வேண்டாம்.

No comments:

Post a Comment