Saturday, July 6, 2019

நுரையீரல் சளி, ஆஸ்துமா, வறட்டு இருமல் போன்றவற்றிக்கு உடனடி தீர்வு. !

இன்றைய மருத்துவ குறிப்பு பகுதியில் பலரை வாட்டி வதைக்கும் சளி பிரச்சனையை தீர்ப்பது எப்படி என்று பார்க்கப் போகின்றோம். நுரையீரல் சளி என்பது சாதாரண விடயம் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆரம்பத்தில் சாதாரண விடயமாக இருக்கும் இந்த சளி நாட்கள் சென்றபின் வேறு நோய்களையும் உருவாக்கிவிடும். அதனால் சளி ஆரம்பத்தில் இருக்கும் போதே வெளியேற்றுவது தான் சிறப்பு.
இந்த மருந்து ஆஸ்துமா, நுரையீரல் சளி, இருமல், போன்றவற்றிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது. சரி வாங்க முதலில் மருத்துவ குறிப்பை பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்:


வெற்றிலை ஒன்று. இஞ்சி சிறிய துண்டு. தேன் தேவையான அளவு. இவற்றை வைத்து எப்படி மருந்து செய்வதென பார்க்கலாம். முதலில் வெற்றிலையின் காம்பை நீக்கிவிடுங்கள். வெற்றிலையை துண்டு துண்டாக நறுக்கி அதனுடன் இஞ்சியை சேருங்கள். நன்றாக கொதித்த தண்ணீர் ஒரு டீஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து அதில் வரும் ஜூஸை சிறிய பாத்திரத்தில் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜூஸ் சிறிது காரமாக இருக்கும் அதனால் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது மருந்து தயார். இந்த ஜூஸை காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் குடித்து வர இரண்டே நாட்களில் நுரையீரல் சளி ஆஸ்துமா போன்றவை நீங்கிவிடும்.


இது மலத்துடன் வெளியேறுவதால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. இந்த ஜூஸ் 10 வயதிற்கு மேட்பட்டவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
வறட்டு இருமலுக்கு வெங்காயம் ஒரு நல்ல நிவாரணத்தை வழங்கும். இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. இது நோய்த்தொற்றுக்களில் இருந்து உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும். அதற்கு 1/2 டீஸ்பூன் வெங்காய சாற்றில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் 2 வேளை உட்கொள்ள வேண்டும். இதனால் தொல்லைமிக்க வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.


யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த சுடுநீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், வறட்டு இருமலைத் தடுக்கலாம்.
சூடான சூப்பைக் குடித்தால், அது தொண்டையில் உள்ள அரிப்பைத் தடுப்பதோடு, வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அதிலும் சிக்கன் சூப் குடிப்பது வறட்டு இருமலுல் மிகவும் நல்லது. அந்த சிக்கன் சூப்பில் வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.


மிளகில் உள்ள வெப்பமூட்டும் பண்புகள், வறட்டு இருமலில் இருந்து விடுபட உதவும். உங்களுக்கு வறட்டு இருமல் இரவு நேரத்தில் அல்லது முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் போது அடிக்கடி வருகிறதா? அப்படியானால் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூளை 1/2 டீஸ்பூன் நெய்யுடன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனால் வறட்டு இருமலைத் தடுக்கலாம்.
தகவல்:https://startamils.com/?p=7529&fbclid=IwAR0T0l_94ClA2Ab-KxhPMz5Gp1_ryNaOnf14w3H2UYbQiP831LmTM7ckZs

No comments:

Post a Comment