Saturday, July 13, 2019

குளிர் கால சளி தொல்லைக்கு நீங்க



குளிர் கால சளி தொல்லைக்கு நீங்கள் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டே நல்ல தீர்வு காண முடியும்…                     தேவையான பொருட்கள்!


  • தேன் – ஒரு டீஸ்பூன்
  • தேங்காய் என்னை – ஒரு டேபிள்ஸ்பூன்
  • ஆப்பிள் சிடர் வினீகர் – ஒரு டேபிள்ஸ்பூன்
  • இஞ்சி – தேவையான அளவு
செய்முறை | ஸ்டெப் #1
சிறிதளவு புதிய இளம் இஞ்சியை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். மேல் தோலை சீவிய பிறகு துண்டு துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும்.
செய்முறை | ஸ்டெப் #2
நறுக்கிய இஞ்சியுடன் ஒரு கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். நல்ல கொதிநிலை அடைந்த பிறகு 15 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும். ஆறிய பிறகு, அதை ஒரு கிளாஸ் டம்ளர் அல்லது பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள்.
செய்முறை | ஸ்டெப் #3
எப்போதெல்லாம் சளி தொல்லை அதிகமாக உணர்கிறீர்களோ அப்போது அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினீகர் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிக்கவும்!
செய்முறை | ஸ்டெப் #4
இது உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள சளியை இரண்டு மணி நேரத்திலேயே வெளியேற்ற செயல்பட துவங்கிவிடும். நல்ல பலனளிக்கும்
உடல் சூட்டால் உருவாகும் சளி
உடல் சூடாக இருப்பதனால் உருவாகும் சளி, மூக்கு வழியாக வெளியேறாது, தொண்டைக்கும், மூக்குக்கும் இடையே இருக்கும், வறட்டு இருமல் இருக்கும், மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சளியை வாய் வழியாகவே வெளியேற்ற வேண்டும்.
அப்போது தூதுவளை எடுத்துக் கொண்டால் உடல் சூடு அதிகமாகி வறட்டு இருமல் அதிகமாகுமே தவிர சளி குறையாது.
அந்த மாதிரியான நேரங்களில் நாட்டு மாதுளம் பழச்சாறு(மெல்லிய மஞ்சள் நிறத்தோலுடன் சேர்த்து) காலை 11 மணி மற்றும் மதியம் 3 மணியளவில் சாப்பிட வேண்டும்.
இதனுடன் நாட்டு சர்க்கரை, வெல்லம் கருப்பட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.
சளித் தொல்லையிலிருந்து விடுபட
  • சளி பிடித்திருக்கும் போது பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம்.
  • 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.
  • 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடியுடன் நெய் கலந்து சாப்பிட மார்புச் சளி நீங்கும்.
    வல்லாரை சூரணத்தை தேன் கலந்து சாப்பிட்டு வர சளி இருமல் நீங்கும்.
  • சிறு வெங்காயம் சாறு, தேன், இஞ்சி சாறு மூன்றையும் சம அளவாக கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட வேண்டும். இரு தினங்களில் சளி நீங்கும்.
தகவல் :https://www.jaffna7news.com/2019/06/2_23.html?fbclid=IwAR0GuXEArq_LUosgwE8QoXEDfHjIfCqU9xSVmojAA8kcww61WQjtiwk7VmQ

No comments:

Post a Comment