Saturday, May 18, 2019

கருப்பு கசகசா’ என்றழைக்கப்படும் சப்ஜா விதையின் பயன்கள்.:

திருநீற்று பச்சிலையோட விதைகள் தான் சப்ஜா விதைகள. சிலர் ‘துளசி விதைகள்’ அல்லது ‘கருப்பு கசகசா’ என்றும் அழைப்பார்கள்.
பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.
ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும். வயிற்று பொருமல் ,கேஸ்ட்ரிக் பிராப்ளம், நெஞ்செரிச்சலையும் போக்கும்.

மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து. எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது, இந்த விதைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
தொடர்ந்து சாப்ட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கும்.
பச்சிலை சாற்றை முகப்பருக்கள் மீது தேய்த்துவந்தால் பரு நீங்கி இயல்பாகும். தழும்புகளும் மறையும்.
ஒரு கைபிடி அளவு இலையை, 200 மி. லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தவேண்டும். மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும்.
காதுவலி மற்றும் காது நோய்களுக்கும் இந்த இலைச்சாறு நிவாரணியாக விளங்குகிறது.
கோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
மீள்பதிவு : Kannan Scorerபிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்.

No comments:

Post a Comment