Monday, May 6, 2019

இதை ஒரு நாளைக்கு இரண்டு சாப்பிடுங்கள் போதும்.. 100 வருடம் வாழலாம்..!

அனைவரின் வீட்டின் சமயலறையில் இருக்கும் ஒரு மசாலா பொருள் தான் கிராம்பு, பிரியாணி குருமா போன்ற உணவிற்கு நல்ல மனதை கொடுப்பதோடு உடலிற்கும் பல நன்மைகளை வாரி வழங்குகிறது .
எனவே இன்றிலிருந்து நீங்கள் சமைக்கும் அனைத்து உணவுகளிலும் கிராம்பை சேர்த்து வாருங்கள். இப்படி சேர்ப்பதினால் அதில் உள்ள மருத்துவ குணங்களினால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தீர்க்கலாம்
கிராம்பில் உள்ள சத்துக்கள்..!
ஆன்டி ஆக்சிடன்கள்,ப்ரோட்டீன்,நார்சத்து,கால்சியம்,இரும்புசத்து பொட்டாசியம்,ஜிங்க் மற்றும் வைட்டமின்கள்-ஏ,சி,டி,கே,இ உள்ளன.

கிராம்பின் பண்புகள்..!

நீரழிவு நோயாளிகளுக்கு நல்லது.சர்க்கரை நோயாளிகளின் இன்சுலின் அளவை சீராக்கி உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.எனவே தினமும் சர்க்கரை நோயாளிகள் கிராம்பை பயன்படுத்தி வாருங்கள்.
ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மலட்டு தன்மையை முற்றிலும் போக்க கிராம்பை தேனுடன் சேர்த்து தினமும் உட்கொண்டு வந்தால் பாலியல் தன்மையை அதிகரிக்கும்.
குறிப்பாக கிராம்பு இரத்த வெள்ளையணுக்களின் அளவை அதிகரித்து நோய் கிருமிகளை எதிர்த்து போராடும்.குறிப்பாக பெண்கள் மற்றும் வயதானவர்கள் அன்றாடம் கிராம்பை பயன்படுத்துவது நல்லது.
கிராம்பு ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது.இதில் உள்ள யூகனல் உடலில் ஏற்படும் வலிகளை குறைத்து உட்காயங்களை குணமாக்கும்.எனவே தினமும் கிராம்பை வாயில் போட்டு மென்று வாருங்கள். இவ்வாறு தினமும் மென்று வந்தால் வாயில் உள்ள கேட்ட பாக்ட்ரியாக்கள் அழிக்கப்பட்டு துர்நாற்றம் தடுக்கப்படும்.
கிராம்பு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதோடு அழிக்கவும் செய்யும். மேலும் ஆய்வுகளில் கிராம்பு நுரையிரல் புற்றுநோய்,மார்பக புற்றுநோய்,கருப்பை புற்றுநோய் மற்றும் இதர புற்றுநோயை ஆரம்ப நிலையிலே தடுப்பதாக தெரிகிறது.
கிராம்பு தலை வலிக்கு ஒரு மிக சிறந்த பொருள்.உங்களுக்கு அடிக்கடி தலை வலி வந்தால் கிராம்பு பொடியை பாலில் சேர்த்து தேன் கலந்து குடித்து வாருங்கள். இதனால் தலை வலியிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
கிராம்பு கல்லீரலுக்கு ஒரு நல்ல பாதுகாப்பை வழங்கும் உணவு பொருள்.இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்கள் கல்லீரலை பாதுகாக்கும்.எனவே உங்கள் கல்லீரல் பாதுகாப்பாக இருங்க தினமும் கிராம்பை உட்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment