Tuesday, September 4, 2018

80 வகையான வாதம் மூட்டுக்களில் நோய்கள் தோன்றக் காரணம்

முதுகுவலி,மூட்டுவலி,பக்கவாதம்(BACKPAIN,OSTEP ARTHRITIS, HEMPLEGIA)
சிசுக்களை திடுக்கிட வைத்தல், உதைத்தல், ஜீவ ஜந்துக்களை காலால் மிதித்தும் கையால் முரித்தல், வறுமையுற்ற முதியோர்களுக்குக் காலினால் ஏவலிடுதல், இவற்றால் வாத சம்பந்த வியாதிகள் அணுகும். 
உயிர்ப் பிரானிகளைகளைக் கட்டியும் தூக்கி ஊஞ்சலாடவிட்டும்,அறுத்தல், பசுவை அடித்தல்,ஜீவராசிகளின் வயிற்றைக்கீரி குடல் வெளிவரக் காணல் இவற்றால் வாத நோய் 84ல் ஆநந்த வாய்வு என்னும் ரோகம் சம்பவிக்கும் 
ஜீவ ஜந்துக்களின் கை கால்களை முறித்தெரிதல்,ஊர்வன,பறவை,காகம்,நாகம் இவற்றைக் காரணமின்றி வலிவிற் கொன்ற தோஷத்தால் கை,கால்களில் குத்தல் குடைச்சல் கரணைகளிற் பிடிப்பு முடக்கு வீக்கம் அணுகுமென்றறிக. 
நரம்பு துவாரங்களில் கெட்ட நீர் தங்கி தசையில் ஊறி வாயு அதிகரித்து வலி அசதி சர்வ அங்க ரோகத்தைப் பற்றி வாயுவிளைவிப்பது 80 வகையான வாதம் மூட்டுக்களில் நோய்கள் தோன்றக் காரணம் 
1- க்ஷயரோகம்(tuberculosis) 
2-கீல்வாயு (rheumatism). 
நாம் உண்னும் உணவில் உண்டாகும் கழிவுகளில் இருக்கும் அமிலத்தை(uric acid)முறிக்க அல்லது வெளியேற்ற ஆல்கலி என்னும் சுண்னாம்புச்சத்து (calcium) தேவை.கால்சியம் குறையும் போது அமிலம் எலும்புகளை அரித்து வலி,வீககம் உண்டாக்குவதை கீல்வாயு என்கிறோம். 
உடலில் இரும்புச் சத்து குறைவதாலும் கணுக்கால் வலி உண்டாகும்.
உப்பும் சுண்ணாம்புச் சத்தும் இணைவதால் திடப் பொருளாக மாறும். உடம்பில் உள்ள சர்க்கரையும் சேர்வதால் எலும்புபோல் உறுதியாகிறது.பொதுவாக உடலில் சர்க்கரை இருக்கும்.அதில் உப்பு கலப்பதால் அவை கட்டியாகிவிடுகின்றன. உதாரணமாக சுண்ணாம்பு, சர்க்கரை, உப்பு, சேர்ந்தால் கட்டியாக மாறும். அதுபோல்தான் இனிப்பு நீர், உப்பு நீர், சுண்ணாம்பு நீர் சேர்ந்து கணுக்காலில் தங்கி கட்டியாகவிடுகின்றது. இதனால் பாத வெடிப்பு ஏற்படுவதற்கும் காரணமாகின்றது. 
கணைக்கால்நோய்(ankle-joint disease);கணைக்கால் எலும்பை பற்றிய க்ஷயரோகம். இலேசாக நொண்டி நடப்பர்.வலி இருக்கும்.கணைக்காலில் வீக்கம் இருக்கும். தோள்,முழங்கை,மணிக்கட்டு நோய்கள்; அடிபட்டதால் தோன்றியதுபோல் இருக்கும். வீக்கமும்,வலியும் இருக்கும்.முழங்கைக்கு மேலேயும்,கீழேயும் உள்ள சதைகள் மெலியத் துவங்கும். 
இடுப்பு-மூட்டு நோய்(hip-joint disease); ஆரம்பத்தில் காலையில் இடுப்பில் பிடிப்பு இருக்கும்.நேரமாக மறைந்துவிடும்.நாளாக ஆக பிடிப்பு கடுமையாகி கூனன் ஆக்கும்.முழங்கால்,கால் பெருவிரல்களில் வலி உண்டாக்கும்.இடுப்பைச்சுற்றி சதைகளில் இசிவு எடுக்கும். கால்கள் கவட்டை பாயும்.இடுப்பில் கட்டி உண்டானால் எரிச்சல்,வலி இருக்கும்.கட்டியை அறுத்து சிகிச்சை செய்தால் கால் குட்டையாகி விடும். 
முழங்கால் நோய்(knee-joint disease); (அ)முழங்காலைச்சுற்றி இலேசான வலியுடன் வெண்மையான வீக்கம்.மிகுதியான களைப்பு. 
(ஆ) வலி இருக்கும்.கால்கள் இலேசாக வளையும்.முழங்காலை அடுத்த சதைகள் சூம்பிவிடும். 
முதுகெலும்புநோய்(pott’s disease);முள்ளந்தண்ண்டில் உள்ள எலும்புகளைத் தாக்குவது. ஏதாவது அடிபடும்போது வெளிப்படும். 
கீல்வாயு(rheumatism);குழந்தைகள்,இளைஞர்களிடத்து தீவிர நோயாகவும் (acute disease), முதியவர்களிடத்தில் நாள்பட்டநோயாக(chronic disease)வும் காணும். மூட்டுக்களில் வலியும்,பிடிப்பும்,சமயத்தில் காய்ச்சல் காணும்.நோய்கண்ட இடத்தில் இலேசான வீக்கமும்,எரிச்சலும் இருக்கும். 
முடக்குவாதம்(rheumatoid arthritis);கீல்வாயு முற்றிய நிலையில் அது முடக்குவாதம். மூட்டுக்களில் வீக்கமும்,வலியும் நிரந்தரமாகி,நாளடைவில் அசைக்க முடியாத நிலை. சுற்றியுள்ள சதைகள் வற்றும்.உடல் மெலியும்.பசி,தூக்கம் குறையும். ஃபிப்ரோஸிட்டிஸ்(fiprosititis); சதையைப் பற்றிய கீல்வாயு. 
கெளட்(gout);கால் பெருவிரல் வீக்கம். 
லம்பாகோ (lumbago) ;இடுப்புப்பிடிப்பு. 
பக்கவாதம்(paralytic stroke);இரத்தக்குழாய்களில் நச்சுப்பொருட்களால் கடுமையான அழுத்தம் ஏற்பட்டு இரத்தக்குழாய் வெடிப்பதால் ( apolexy (or )cerebral hemorrhage) உண்டாகும்.கடுமையான தலைவலி,வாந்தி காணல்,உடம்பு வியர்த்தல்,நினைவு தடுமாறல்,மூர்ச்சையுற்ற நிலையில் பலமான குறட்டை,உடம்பின் ஒரு பகுதி செயலற்றுப்போதல். 
வாதம்:உடல் கைகால் நொந்து கடுத்து உளைந்து பலங்கெட்டுஅதிசோம்பல்,தூக்கம் விளைவித்தல். 
துடிவாதம்:தேகத்தில் பல இடங்களில் துடித்து அடங்கும்

சாவான் கால்நடுக்கும் வாதம்:தேகம் வெதுப்பி உளைந்து கிறுகிறுத்துநடுங்கும் 
அண்டவாதம்:ஒருபீஜம் வீங்கி வலித்து மேல்நோக்கி ஏறும்

சந்துவாதம்:சந்திற் பிடித்து அடாமல்உளைந்து வலித்து மாலையில்அதிகரித்து உடல் மெலிந்து காது கேட்கும்.
ஓடுவாதம்:தேகம் மெலிந்து உளைந்து பல இடங்களும் ஓடிக்குத்திபலங் குறைந்து நாவும் பல்லும் வரளும்.
தோள்வாதம்:தோள் வீங்கி கண்டம் பிடறி வலித்துக் கடுக்கும்.
பக்கவாதம்:ஒருபுறத்தில் கையும் காலும்வணங்காதிருக்கும்.
கழுத்துவாதம்:கழுத்தை திருப்பி பார்க்கவிடாமல் பிடித்துக்கொள்ளும்.
சிரசுவாதம்:இரவும்பகலும் விடாமல் தலை வலிக்கும் 
தம்பணவாதம்:இரவும்பகலும் விடாமல் நாவை இழுத்துக்கொள்ளும்.
தந்தவாதம்:பல் அசைந்துவலிக்கும். 
கரணிவாதம்:இருசெவியும் மந்திக்கும். 
அங்குலிவாதம்:விரல்கள் விரைத்து ஒன்றைப்பிடிக்க முடியாமல் இருக்கும்.

முன்கைவாதம்:முன்கை இரண்டும் முகமும் வீங்கிவலிக்கும்.
வதனவாதம்:முகம் ஊதி கடுக்கும் 
இடுப்பு வாதம்;இடுப்புளங்கு கடுத்துக் குனிய,நிமிர விடாது இருக்கும்.

வருனை வாதம்;அசனத்துருளை நொந்து கடுக்கும். 
துடை வாதம்;துடை கடுத்து நடக்க முடியாதிருக்கும்.

முழங்கால் வாதம்;முழங்கால் வீங்கிக் கடுக்கும்.
கெண்டைவாதம்;கெண்டைக்கால் கடுத்து வலிக்கும்.
குதிவாதம்;குதி வீங்கிக் கடுக்கும்.
வாய் வாதம்;வாய்கடுத்து அலகு கிட்டி வியர்த்து பேச முடியாதிருக்கும்.
தண்டுவாதம்;தண்டு பொருமி தடிசாரும்.
வாணவாதம்;கை காலை சுருக்க வாங்கி இழுத்துக் கடுக்கும். 
தனுர் வாதம்;அடிக்கடி தேகத்தை வில்போல் வளைத்து வியர்த்து நாக்குப் பல்கிட்டி மேல்மூச்சு காணும்.

அசீரணவாதம்;தூர நடக்க கூடாமலும்,உண்ட அசனஞ் செமியாமலும்,ஏப்பம் பரியும். 
சுரோணிதவாதம்;இருகாதிலும் இரத்தங் கட்டி அயரும். 
கபவாதம்:உதரத்தின் மேல்நரம்பு சுமையாய்த் தோன்றி மூலாக்கினிமந்தித்து உடல் வெளுத்துகாணும். 
குடல்வாதம்:குடல் புரண்டு குமுறி இரைந்து வலித்து மந்தித்து பரந்துஓடிவலித்துக் கால் உளையும்

1. சங்குபற்பம் 100மிகி,அமுக்கராசூரணம் 1கிராம் 5-10மிலி தேனில் தினமிருவேளை கொள்ள மூட்டுவலி தீரும்
2. பிண்டத்தைலம் அல்லது வாதகேசரித்தைலம் தடவி வெந்நீரில் ஒற்றடமிட மூட்டுவலி, முதுகுவலி தீரும்

3. நொச்சி,தழுதாழை,வாதநாராயணன் இலைகளை வேகவைத்து ஒற்றடமிட மூட்டுவலி, வீக்கம் குணமாகும்
4. தழுதாழை இலைகளை வி.எண்ணையில் வதக்கி கட்ட சுளுக்கு, மூட்டுவலி, குணமாகும்
5. தழுதாழை இலைகளை ஆலிவ் எண்ணையில் வதக்கிக்கட்ட விரைவாதம், நெறிக் கட்டிகள், வாதவீக்கம் குணமாகும்
6. வாதநாராயணன் இலைகளை சமைத்துச் சாப்பிட,வி.எண்ணையில் வதக்கி ஒற்றடமிட வாதவலி, வீக்கம்,கட்டிகள் குணமாகும்
7. வாதநாராயணன் இலைச்சாறு 1தேகரண்டி தினம் காலையில் பருகிவர கை,கால் குடைச்சல், வலி குணமாகும்
8. வாதநாராயணன் இலைச்சாறு1லி ,மஞ்சள்கரிசாலை,குப்பைமேனி, வெற்றிலை, சாறு வகைக்கு கால்,வேப்பெண்ணை,வி.எண்ணை,ந.எண்ணை வகைக்கு அரைலி, சுக்கு,மிளகு,திப்பிலி , சீரகம், கருஞ்சீரகம்,மஞ்சள் வகைக்கு 20கிராம்,பசும்பால் அரை லி, சேர்த்துக் காய்ச்சி, 21எருக்கம்பூ சேர்த்து காய்ச்சி வடித்து பூசிவர பக்கவாதம், பாரிசவாயு,உடல்இழுப்பு,உடல்வலி தீரும்
9. உத்தாமணி இலைசாற்றுடன் சமன் எலுமிச்சைசாறு கலந்து பூச மூட்டுவலி கட்டுப்படும்
10. 50கிராம் குங்கிலியதூளை அரைலி .ந.எண்ணையில் காய்ச்சிப் பூச மூட்டுவலி தீரும்
11. குப்பைமேனிச்சாறு சமன் தே.எண்ணை கலந்து காய்ச்சி வடித்துப்பூச மூட்டுவலி தீரும்
12. ஊமத்தைஇலையை ந.எண்ணையில் வதக்கி ஒற்றடமிட கீல்வாயு குணமாகும்
13. போஸ்தக்காய்1,துத்திஇலை1பிடி சிதைத்து,சுண்டக்காய்ச்சி ஒற்றடமிட கீல்வாயு குணமாகும்
14. வெள்ளைக்கடுகை அரைத்து,பருத்தித்துணியில் தடவிக்கட்ட கீல்வாயு, இரத்தக் கட்டு குணமாகும்
15. கல்யாணமுருங்கை இலைகளை நசுக்கி,வதக்கிக்கட்ட கீல்வாயு குணமாகும்
16. பற்பாடகம்வேர் 100கிராம் சிதைத்து,1லி .ந.எண்ணையில் காய்ச்சி வடித்துப் பூசிவர கீல்வாயு குணமாகும்
17. நெருப்பில்சுட்டசெங்கல்மீது,எருக்கன்பழுப்பு இலைகள் 3 பரப்பி,குதிகாலை 5 நிமிடங்கள் வைத்து எடுக்க குதிகால்வாதம் தீரும்
18. மிளகாய்பூண்டு இலைகளை அரைத்துப் பற்றிட இடுப்புவலி குணமாகும்
19. கோரைக்கிழங்குசூரணம் அரைதேகரண்டி தினமிருவேளை 200மிலிபாலில் கலந்து பருக மூட்டுவலி,தசைவலி குணமாகும்
20. முடக்கற்றான் இலைகளை இரசமாக செய்து உணவில் சேர்த்து சாப்பிட கைகால் குடைச்சல், மூட்டுவலி குணமாகும்
21. மூசாம்பரம்100,அதிமதுரம்100,சிற்றாமுட்டி100,கற்பூரம்20கிராம்,குண்றிமணி20கி, சுக்கு40 கிராம்சேர்த்தரைத்து,தேவையான அளவெடுத்து 1முட்டைவெண்கரு, 1தேகரண்டி ந.எண்ணை சேர்த்துக் கலந்து வீக்கங்களுடன் கூடிய மூட்டுவலிக்குப் பற்றிட குணமாகும்
22. கோதுமையை பொன்னிறமாய் வறுத்துப் பொடித்து,சலித்து தேன் கலந்து சாப்பிட மூட்டுவலி குணமாகும்
23. கொன்றை வேர்பட்டை 100கிராம் சிதைத்து,5ல்1ன்றாய்க் காய்ச்சி 200மிலி, தினமிரு வேளை பருகிவர குடல்வாதம்,வாதநோய்கள் தீரும்
24. கஸ்தூரிமஞ்சள்1,சிறிதுசாம்பிராணி,1தேகரண்டி கடுகு,நீர்விட்டரைத்து, மண் சட்டியிலிட்டு சூடேற்றி,பொறுக்கும் சூட்டில் பற்றிட மூட்டுவலி குணமாகும்
25. சங்கிலை,வேம்பு,நொச்சி,நாயுருவி,குப்பைமேனிஆகியவற்றில் வேதுபிடிக்க வாத வீக்கம்,வலி, கீல்வாயு தீரும்
26. மூக்கிரட்டை இலையை பொரியல்,துவையலாக வாரமிருமுறை சாப்பிட்டுவர வாயுநோய்கள் வராது
27. 4,5வெள்ளைப்பூண்டை பாலில் இட்டுக் காய்ச்சி,150மிலி பால் வீதம் சாப்பிட்டுவர மூட்டுவலி குணமாகும்
28. புதினா இலைசாற்றில் பச்சைக்கற்பூரம் சேர்த்து இழைத்து அழுத்தித் தேய்த்துவர மூட்டுவலி குணமாகும்
29. வேலிப்பருத்தி சாற்றில் சுக்கு,பெருங்காயம் பொடித்துப் போட்டு இளஞ்சூட்டில் பற்றிட மூட்டுவலி, வீக்கம் குணமாகும்
30. வேலிப்பருத்திவேரை சிதைத்து,புதுமண்சட்டியிலிட்டு அடுப்பேற்றி பொறுக்கும் சூட்டில் ஒற்றடமிட மூட்டுவலி குணமாகும்
31. வெங்காயச்சாற்றுடன் சமன் கடுகெண்ணை கலந்து தேய்த்துவர வாதவலிகள் கட்டுப்படும்
32. சுக்கை உரைத்து கைகால் மூட்டு வீக்கங்களுக்குப் பற்றிட குணமாகும்
33. நன்னாரி வேர் ஊறல் குடிநீர் 30மிலி தினமிருவேளை பருகிவர வாதநோய், தோல்நோய் தீரும்
34. ஆவாரைபிசின்,விதை சமன் பொடித்து,3கிராம்,அரைதேகரண்டி தேனுடன் கலந்துண்டு வர நரம்புதளர்ச்சி,மூட்டுவலி,பிடிப்புகள்,சருமவெடிப்புகள், வறட்சி குணமாகும்
35. சித்தரத்தை,சீந்தில்கொடி,சிற்றாமுட்டிவேர்,அதிமதுரம்,நெருஞ்சில்,ஆமணக்குவேர் வகைக்கு சமனெடுத்து கஷாயம் செய்து சாப்பிட பாரிசவாயு (விரைவீக்கம்) குணமாகும்
36. நிலவேம்புக்குடிநீர்100மிலி,200மிலி வெந்நீரில் கலந்து தினம்3வேளை பருகிவர முதுகுவலி குணமாகும்
37. முடக்கற்றான் இலையையரைத்து தோசைமாவுடன கலந்து தோசை செய்து சாப்பிட வாத நோய்கள் தீரும்
38. செம்பரத்தைபூ கஷாயத்துடன் ,மான்கொம்புபற்பம் 1கிராம் கலந்து பருகிவர பாரிசவாயு குணமாகும்.இதயத்துடிப்பு ஒழுங்குபடும்.குருதி சுத்தமாகும்
39. அத்திப்பாலை பற்றிட மூட்டுவலி விரைவில் தீரும்
40. கட்டுக்கொடிவேர் ,1துண்டு சுக்கு,4மிளகு சேர்த்து காய்ச்சிப் பருக வாதநோய், வாதவலி, கீல்நோய் தீரும்
41. சாறுவேளை இலையை வதக்கிக் கட்ட கீல்வாயு வீக்கம் குறைந்து வலி தீரும்
42. சிற்றாமுட்டிவேர் 100கிராம் சிதைத்து 500மிலி ந.எண்ணையில் காய்ச்சி தேய்த்து வர மூட்டுவலி வாதநோய்கள் தீரும்
43. முட்சங்கன்இலை,வேர்பட்டை சமனரைத்து,சுண்டைக்காயளவு,காலை மாலை 20 நாள் வெந்நீரில் கொள்ள ஆரம்பநிலையில் உள்ள பாரிசவாதம்,வாயு, குடைச்சல், பக்கவாதம் தீரும்
44. நொச்சிஇலை1பிடி,மூக்கிரட்டைவேர்,காக்கரட்டான்வேர் வகைக்கு அரைபிடி, சிதைத்து, 1துண்டுசுக்கு,6மிளகு,1தேகரண்டிசீரகம் சேர்த்து,2ல்1ன்றாய்காய்ச்சி,30மிலி காலைமாலை கொடுத்துவர ஆரம்பநிலை இளம்பிள்ளைவாதம்(போலியோ) தீரும்
45. சப்பாத்திக்கள்ளி முள்நீக்கி வி.எண்ணையில் வாட்டிக்கட்ட முடக்குவாதம் தீரும். ஒத்தடமும் கொடுக்கலாம்
46. பாவட்டை இலையை வதக்கி இளம்சூட்டில் கட்ட வாதவீக்கம்,வலி குணமாகும்
47. மிளகாய்பூண்டுவிதைஎண்ணை2துளி,சர்க்கரையில்,காலைமாலை சாப்பிட்டுவர பாரிசவாயு, பக்கச்சூலை,இழுப்பு,முகவாதம்,இளம்பிள்ளைவாதம் தீரும்
48. மிளகாய்பூண்டு வேர்40கிராம் சிதைத்து,250மிலி நீரில்100மிலியாக காய்ச்சி, தினமிரு வேளை பருக வாதநோய்,வாதவீக்கம்,பாரிசவாதம் தீரும்
49. முடக்கற்றான்இலை,சூரத்தாவாரைஇலை,உத்தாமணிஇலை,வகைக்குப்பிடி,வதக்கி, 500 மிலி நீரிட்டு 200மிலியாகக் காய்ச்சி காலை3நாள்,1வாரம்விட்டு3நாள்,7முறை கொடுக்க பாரிசவாயு குணமாகும்
50. விழுதிஇலைக்குடிநீரில்,வி.எண்ணையில் இரசம் செய்து உணவுடன் கொள்ள ஓரிருமுறை மலங்கழிந்து,மலப்புழுநீங்கும்.வாதநீரைவெளியேற்றி வீக்கம் குறைந்து குத்தல்குடைச்சல் வலி தீரும்
51. முள்ளங்கி இலைச்சாறு 5மிலி தினம் பருகிவர மலக்கட்டு, நீர்க்கட்டு, சூதகக்கட்டு, எளிய வாத நோய்கள்தீரும்
52. அமுக்கராசூரணமாத்திரை2,தினம்2வேளைகொள்ள முதுகுவலி தீரும்.
53. நொச்சிஇலைசாறு1தேகரண்டி,மிளகுத்தூள்1கிராம் சிறிதளவுநெய் சேர்த்து தினம்2 வேளை பருக மூட்டுவலி இடுப்புவலி வீக்கம் குணமாகும்
54. தழுதாழைஇலை1பிடிவென்நீரில் கொதிக்க வைத்து குளித்துவர குடிக்க வாதவலி குணமாகும் 
55. வாதநாராயணன் இலைசூரணம்3கிராம் தினம்1வேளை வெந்நீரில் கொள்ள குடல்வாயு குணமாகும் . 
56. ஜாதிக்காய்,சுக்கு வகைக்கு20கிராம் சீரகம்50கிராம் பொடித்து அரைகிராம் தூளுடன் கால்தேகரண்டி சர்க்கரை சேர்த்து உணவுக்குமுன் சாப்பிட குடல்வாயு குணமாகும்

57. ஜாதிக்காய் எண்ணையை பூசிவர புண்கள் காயங்கள் பாரிசவாயு கட்டுப்படும்

58. 100கிராம் சிற்றாமுட்டி வேரை சிதைத்து 500மிலி ந.எண்ணையில் காய்ச்சி வடித்து பூசிவர மூட்டுவலி வாதநோய்கள் குணமாகும்


59. காட்டெருமைப்பால்(எருக்கன்) அழுத்தித் தேய்த்துவர வாதவலி குணமாகும்

60. மீன்எண்ணை 1தேகரண்டி தினம்2வேளை பருகி மூட்டுவலி உள்ள இடத்திலும் தேய்த்துவர மூட்டுவலி குணமாகும்

61. முள்ளங்கி சமூலச்சாறு 100மிலிதினம் காலை பருகிவர மூட்டுவலி குணமாகும்

62. தே.எண்ணை,வி.எண்ணை,வே.எண்ணை கலந்து வலி உள்ள இடங்களில் தேய்த்து, வெயிலில் அமர்ந்து மெதுவாக தேய்த்துவிட மூட்டுவலி குணமாகும் 
63. வாதநாராயணன் இலைசாறு1லி, வி.எண்ணை1லி,பூண்டு20கிராம், திரிகடுகு வகைக்கு 40கிராம், வெண்கடுகு 10கிராம், அரைத்து பதமாய் காய்ச்சி வடித்து (வாதமடக்கித் தைலம்) காலை2தேகரண்டி சாப்பிட்டுவர வாதரோகம், கீல்வாயு, முடக்குவாதம், நரித்தலைவாதம் ,இளம்பிள்ளை வாதம், நடுக்குவாதம், நரம்புத் தளர்ச்சி, கைகால்குடைச்சல் தீரும்.

64. சித்திரமூலம்,மிளகரனை,நொச்சி இவற்றின் வேர்பட்டை வகைக்கு 200கிராம் பொடித்துக் கலந்து திரிகடி குளிர்ந்த நீரில் கொள்ள சகலவாதமும் தீரும். 
65. கால்கிலோ இஞ்சியை தோல்சீவி நறுக்கி குப்பைமேனிசாறு விட்டு விரவி 40கிராம் வெள்ளெருக்கம் பூ அல்லது பட்டையை அரைத்துப் பிசறி இரவில் பனியில் வைத்து காலைமாலை 6 வேளை சாப்பிட அண்டவாதம் தீரும். 
66. தேங்காய்க்குள் கடுகை போட்டுமூடி ஒருசிரட்டை வெந்தபிறகு கடுகை மோரில் அரைத்து புன்னைக்காயளவு 3நாள் கொள்ள சங்குவாதம் தீரும்.

67. முருங்கைபட்டை அரைத்து எலுமிச்சையளவு,300மிலி எலுமிச்சைசாறில் கொடுக்க குடல்வாதம் தீரும்.
68. மான்செவிக்கள்ளி இலைசாற்றை 3நாள் தடவி வெந்தீர் குடிக்க கெண்டைக்கால் வாதம் நீங்கும்
69. தழுதாழை,நொச்சி,வாதமடக்கி இலைகளை இடித்து நீரில் காய்ச்சி. தோளில் வி.எண்ணை தடவி ஒத்தடமிட சோளவாதம் தீரும்.
70. பரங்கிப்பட்டை.திரிகடுகு வகைக்கு சமன் சூரணித்து திரிகடி,வாததேகிக்கு தேனிலும், இளந்தேகிக்கு பசுநெய்யிலும் 10நாள் கொள்ள உட்குடைச்சல், சூலை, கடுப்பு,வாயு, வாதக்கடுப்பு நீங்கும்.வாயு பதார்த்தம் நீக்கவும்.
71. பிரண்டையை சூரணித்து எருக்கரசம் விட்டு வதக்கிக் கட்ட மொழி வீக்கம் தீரும்.
72. சங்கிலைச்சாறும் வெள்ளாட்டுப்பாலும் கலந்து கால்படி 3நாள் கொள்ள திமிர் நீங்கும்.
73. இலந்தையிலையை அரைத்து காடியில் கரைத்து மத்தால் கடைந்து வரும் நுரையை உடம்பில் பூச எரிவாத எரிச்சல் தீரும்.
74. 200 கிராம் இஞ்சியை தட்டி சாறுபிழிந்து முறித்து, அதில் 50கிராம் பூண்டைச் சிதைத்துப் பிழிந்து தினமிருவேளை 3நாள் கொடுக்க நெஞ்சில் குத்து, விலாக்குத்து தீரும்.
75. இருபதுவெள்ளைப்பூண்டைதோல்நீக்கி,தேங்காய்துருவலுக்குள் பொதிந்து பிட்டவித்து ,பூண்டையரைத்து வேளைக்கு கொட்டைப்பாக்களவு 8நாள்கொள்ள சகல குண்மம் வாயு நீங்கும்.
76. .பரங்கிப்பட்டை250கிராம்,நிலாவாரை200கிராம்,சுக்கு150கிராம்,இடித்துதூள்செய்து வேளைக்கு20கிராம்தூளை 4ல்1ன்றாய் காய்ச்சி 16வேளை சாப்பிட வாதசூலை கைகால் முடக்கு வீக்கக்கடுப்பு உளைவு தீரும்
77. உகாயிலையும் உப்பும் கசக்கி 3வேளை தடவ மூச்சுக்குத்து தீரும்
78. நல்ல அபினை குளிர்ந்த தண்ணீரிலரைத்து உள்ளங்காலில் சூடுபறக்கத் தேய்க்க உள்ளங்கால் குத்தும் நீர்த்தங்கலும் நீங்கும்
79. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும். 
80. சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து, வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவ குணமாகும்.

81. மிளகுத் தூளும், கற்பூரத்தையும் கொதிக்க வைத்த தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போட அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவ கை சுளுக்கு விட்டு விடும்.
நன்றி : மருந்தில்லா மருத்துவம் 

No comments:

Post a Comment