Thursday, August 30, 2018

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை எப்பவும் சாப்பிடாதீங்க!!

நல்ல உணவுகளாகவே இருந்தாலும் அதையதை அந்தந்த நேர்த்தில் சாப்பிட்டால்தான் நன்மை. நேரங்காலம் தெரியாமல் சாப்பிட்டால் அவை எதிர்வினையைத் தான் தரும்.
கீரை மிகவும் நல்லது. ஆனால் இரவில் சாப்பிட்டால் அஜீரணம் உண்டாக்கிவிடும். பால் நல்லது. ஆனால் தூங்குவதற்கு சற்று முன் குடித்தால் கெடுதல், அப்படி சில உணவுகள் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது. அவற்றிலுள்ள அமிலத்தன்மை குடலின் உட்சுவரில் உள்ள படலத்தை அழித்துவிடும்.
இதனால் இரைப்பையில் அமிலம் சுரக்கும்போது அவை உட்சுவரை பாதித்து புண் உண்டாக்கலாம், அல்லது அசிடிட்டியை உண்டாக்கலாம் . அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட்வேக் கூடாத உண்வுகள் எவை என்று பார்க்கலாம்.

தக்காளி :
தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கிவிடும். ஆகவே ஹோட்டலில் நல்ல பசியோடு செல்லும்போது தக்காளி சூப் எல்லாம் ஆர்டர் செய்துவிடாதீர்கள்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு :
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்.
வாழைப்பழம் :
வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும்.
காரமான உணவுகள் :
காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.
காபி, டீ :
காபி மற்றும் டீ குடிக்கலாம் நல்லதுதான். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
தயிர்
தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.
மாத்திரைகள் :
எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.
சோடா :
இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

ஆல்கஹால் :
ஆல்கஹால் ஆரோக்கியமானதில்லை. அதிலும் அதனை வெறும் வயிற்றில் குடித்தால், அல்லது அதன் பின் எதுவும் சாப்பிடாமலேயே படுத்துக் கொண்டால், மஞ்சள் காமாலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.
நன்றி : வந்திய தேவன் - அறுசுவை சைவ உணவுகளும் ஆரோக்கிய குறிப்புகளும்

No comments:

Post a Comment