Tuesday, August 28, 2018

வசம்பு

வசம்பைச்சுட்டு, கரியைத் தேனில் குழைத்து, குழந்தைகளின் நாக்கில் பூச, நன்றாகப் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்; குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, பேதி கட்டுப்படும்.
வசம்பு காய்ச்சலைக் குறைக்கும், குடல் வாயுவைக் கலைக்கும், வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும், ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்,பசியுண்டாக்கும்.

வசம்பை விளக்குத் தீயில் சுட்டு, தாய்ப்பாலில் 3 முறை உரைத்து குழந்தைகளின் நாக்கில் தடவ நாக்குத் தடுமாற்றம் (திக்குவாய்), வாயில் நீரொழுகல் தீரும். 
வாந்தி கட்டுப்பட வசம்பு சுட்ட சாம்பலை தேனில் குழைத்து நாக்கில் தடவ வேண்டும்

Image may contain: plant, nature and outdoorNo automatic alt text available.
வசம்பை விளக்குத் தீயில் சுட்டு, தாய்ப்பாலில் 3 முறை உரைத்து தொப்புளைச் சுற்றி தடவி வர குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு குணமாகும்.
நாட்பட்ட மூட்டுவலி நோய்களுக்கு வசம்பை காசிக்கட்டியுடன்(காசிக்கட்டி நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்.) சேர்த்து நீர் விட்டுஅரைத்து பற்றிட குணமாகும்.

வசம்பை வறுத்து பொடியை கால் கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டு வர சளி, வாயு ஆகியவை தீரும்.
வசம்புடன், அதிமதுரம் சேர்த்து ½ லிட்டர் தண்ணீரில் காய்ச்சி கஷாயமாக்கி ஒரு டம்ளர் காலை, மாலை குடித்து வர ஜுரம், இருமல், வயிற்று வலி குணமாகும். எவ்வித விஷகடிகளுக்கும் இதன் வேரை வாயிலிட்டு மென்று வர விஷம் முறியும்.

வசம்பு, பெருங்காயம், திரிகடுகு, கடுக்காய்தோல், அதிவிடயம், கருப்பு உப்பு சம அளவு அரைத்து தேனில் அல்லது வெந்நீரில் 100 மி.லி காலை, மாலை குடித்து வர வயிற்று வலி, மூர்ச்சை, பைத்தியம், காக்காய்வலிப்பு ஆகியவை குணமாகும்.
விஷத்தன்மை கலந்த உணவை சாப்பிட்டாலோ, அல்லது விஷத்தையோ சாப்பிட்டாலோ வசம்பு பொடியை 10 அல்லது 20 கிராம் நீரில் கரைத்து குடித்தால் விஷம் வெளியே வந்துவிடும்.
வசம்பை பொடியை தொடர்ந்து 40 நாட்கள் வெந்நீரில் கலந்து காலை, மாலை குடித்து வர நரம்புத்தளர்ச்சி குணமாகும்.நரம்புகள் முறுக்கு ஏறும். வசம்பு பொடி 10 கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வர எவ்வித தொற்று நோய்களும் அணுகாது.
முருங்கை இலையுடன் வசம்பு உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட வயிறு உப்புசம், வயிறு வலி தீரும்.

வசம்பு கொத்தமல்லிவிதை லோத்திரப்பட்டை அரைத்து முகத்தில் பூச முகப்பரு தேவையில்லாத முடிகள் நீங்கி முகம் அழகை தரும்.

மஞ்சள், வேப்பிலை வசம்பு சேர்த்து அரைத்து உடலில் பற்றிட மேகப்புண், படை, வட்டமான படை, நச்சுக்கடி ஆகியவை குணமாகும். 

(குறிப்பு):வசம்பை அதிக அளவில் நீண்ட காலத்திற்கு உட்கொண்டால் கடுமையான வாந்தியையும், வயிற்றுக்குமட்டலையும் தூண்டும்.
நன்றி : சந்திரசேகர் ரெங்கராஜ் - சித்தா தளம் 

No comments:

Post a Comment