Wednesday, July 4, 2018

இயற்கை மூலிகை குளியல் பொடி



குளியல்பொடி தயாரிக்கும் முறை
கஸ்தூரி மஞ்சள்
கிளியூரம்பட்டை
சடாமாஞ்சில்
பூலாங்கிழங்கு
பூஞ்சாந்துப்பட்டை
பச்சிலை
கோரைக்கிழங்கு
சோம்பு
அன்னாசிப்பூ
லவங்கப்பத்திரி
வெட்டிவேர்
நன்னாரிவேர்
சிறுநாகப்பூ
கார்போகரிசி
தாளிசபத்திரி
சன்பகமொட்டு
வெண்கோஷ்டம்
கிராம்பு
கவுளா
மாகாளிக்கிழங்கு
லவங்கப்பட்டை
ஏலக்காய்
சாதிக்காய்
பச்சோந்திப்பட்டை
மஞ்சிஷ்டி
மரு
அனைத்தும் 24 கிராம்
மகிழம்பூ
மரிக்கொழுந்து
ரோஜாமொட்டு
விளாமிச்சம் வேர்
அனைத்தும் 48 கிராம்
திரவியப்பட்டை
வெந்தயம்
எலுமிச்சை பழத்தோல்
அனைத்தும் 72 கிராம்
சந்தனத்தூள்
மட்டும் 96 கிராம்
இச்சரக்குகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்,இவற்றில் ஏதாவது கிடைக்கவில்லை என்றால் விட்டு விடலாம் பரவாயில்லை,
இவையனைத்தையும் வெயிலில் உலர்த்தி இடித்து தூள் செய்து அழுத்தமான மூடியுள்ள டப்பாவில் காற்றுப்புகாமல் வைக்கவும்,
தேவையான அளவு பொடியை 15 நிமிடம் நீரில் ஊறவைத்து உடலில் தேய்த்து குளிக்கவும், உடலில் எவ்வளவு அழுக்கு இருப்பினும் சுத்தமாகிவிடும்,சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் இப்பொடியை பயன்படுத்தலாம்,
உடலிலுள்ள சொறி சிரங்கு படை தேமல் அழுக்கு இவைகளை போக்கி உடல் நல்ல மணம் வீசும்.
இயற்கை மூலிகை குளியல் பொடி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பயன்படுத்தகூடியது.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகப்பபொலியும், 
நிற மாற்ற மும் ஏற்படும்.மேலும் சரும பிரச்சினைகலான முகப்பரு, கரும்புள்ளி, கருவளயம் ஆகியவை நீங்கும். தோல் வியாதிகள் முற்றிலும் மறையும். உடலின் வியர்வை நாற்றத்தை போக்கி உடலுக்கு நறுமணம் தரக்கூடியது. உடல் சூட்டை தனித்து , உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதை பாலாடையுடன் கலந்து (Face pack) பயன்படுத்தலாம். சிறு வயது முதலே குழந்தைகளுக்கு இதை பயன்படுத்தி வந்தால் சரும பிரச்சினைகள் வராது.
பயன்படுத்தபட்ட பொருட்களும், அதன் மருத்துவ குணங்களும் :
1. க. மஞ்சள் - அழகும், குளிர்ச்சியும் தரும்
2. பாசிப்பயறு - சரும பாதுகாப்பு, தோல் முடி உறுதியாக இருக்க
3. கடலை பருப்பு - இறந்த செல்களை நீக்கி பொலிவு தரும்
4. ரோஜா இதழ் - வறட்சியான சருமத்திர்கு மிகவும் நல்லது
5. மரிகொலுந்து - சருமத்தில் ஏற்படும் கிருமி தொற்றுநோய் நீக்குகிறது
6. துளசி - உடலின் வெப்பத்த ஒரே சீராக வைக்க உதவுகிறது
7. ஆரஞ்சு தோல் - மேனி பளபளக்கும், மிருதுவாகும்
8. நெல்லிக்காய் - உடல் சூட்டை தணிக்கும்,அழகும்,
ஆயுள் கொடுக்கும்.
9. கார்போகாரசி - படர்தாமரை, வெண்புல்லி ஆகியவை நீக்கும்
10. கோரைகிழன்கு - வியர்வை நாற்றம் நீக்கும்
11. அதிமதுரம் - உடல் நாற்றத்தை நீக்கி நறுமணம் கொடுக்கும்
12. கருச்சீரகம் - தோல் வியாதிகள் குணமாக உதவும்
13. வசம்பு - தொற்றுநோய் அகற்றும், சிறந்த கிருமி நாசினி
14. பூலான் கிழகு - உடலுக்கு நறுமணம் அளிக்கும்
15. வெந்தயம் - உடல் சூட்டை குறைக்கும், தோல் பளபளக்கும்
16. ஆவாரம் பூ - சரும நிறம் மாறும்
17. வெள்ளரி விதை- இயற்கை அழகும், இளமை தோற்றம் கொடுக்கும்
18. கசகசா- முகப்பரு மறையும், முகம் அழகு பெறும்
19. வெட்டி வேர் - நறுமணம் , குளிர்ச்சி தரும்
20. வேம்பு- இறந்த செல்களை அகற்றி முகப்பருவை தடுக்கும்
21. திருநீற்றுப் பச்சிலை - முகப்பரு,கரும்புள்ளி, பாலுன்னி ஆகியவற்றை போக்கும்
22. செம்பருத்தி பூ - உடலுக்கு குளிர்ச்சி தரும்
23. கரிசலாங்கண்ணி- மேனிக்கு மினுமினுப்பு தரும்
24. சந்தனம் - வியர்குரு, படர்தாமரை, தேமல் ஆகியவை நீக்கி உடல் அழகை கூட்டும்
25. உசிலை இலை- உடலுக்கு குளிர்ச்சி தரும்.
இச்சரக்குகள் அனைத்தும் சம அளவு.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்,இவற்றில் ஏதாவது கிடைக்கவில்லை என்றால் விட்டு விடலாம் பரவாயில்லை,
இவையனைத்தையும் வெயிலில் உலர்த்தி இடித்து தூள் செய்து அழுத்தமான மூடியுள்ள டப்பாவில் காற்றுப்புகாமல் வைக்கவும்,
தேவையான அளவு பொடியை 15 நிமிடம் நீரில் ஊறவைத்து உடலில் தேய்த்து குளிக்கவும், உடலில் எவ்வளவு அழுக்கு இருப்பினும் சுத்தமாகிவிடும்,சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் இப்பொடியை பயன்படுத்தலாம்.
நன்றி : A  முஹமது யாஸீன் 
பிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்.

No comments:

Post a Comment