Wednesday, March 21, 2018

பற்சொத்தையிலிருந்து விடுபட

தேவையான பொருட்கள்
  • கிராம்பு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • பூண்டு ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
  • மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு பெளலில் கலந்து கொள்ள வேண்டும்.
    அதை பேஸ்ட் மாதிரி கலக்க வேண்டும்
  • இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பற்களில் கைகளால் அல்லது காட்டன் பஞ்சை கொண்டு வைக்க வேண்டும்.
  • இந்த முறையை ஒவ்வொரு நாள் இரவிலும் 2 மாதங்களுக்கு செய்ய வேண்டும்
    கண்டிப்பாக இந்த முறை உங்களை பற்சொத்தையிலிருந்து விடு பட வைக்கும்.
குறிப்பு :
இந்த முறை உங்கள் பற்சொத்தையை குணப்படுத்தும். ஆனால் இதை தொடர்ந்து எடுத்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும். ஒரு தடவை பயன்படுத்தினால் எந்த ஒரு மாற்றமும் தெரியாது. இதனுடன் சேர்த்து அதிகமான சர்க்கரை பொருட்கள், சாக்லேட், ஐஸ் க்ரீம், கார்பனேற்ற பானங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக ஒவ்வொரு தடவையும் பல்துலக்குதல் மற்றும் வாயை கொப்பளித்தல் போன்றவற்றை வாரத்திற்கு 4 நாட்களாவது மேற்கொள்ள வேண்டும். மேலும் கால்சியம் நிறைந்த உணவுகளான கீரைகள் மற்றும் பால் பொருட்கள் சாப்பிட வேண்டும். இது உங்கள் பற்சொத்தையை எதிர்த்து போராடும்.
பூண்டு, கிராம்பு எண்ணெய் மற்றும் உப்பு இவைகளில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பற்களில் உள்ள கிருமிகளை அழித்து அதன் எண்ணிக்கையை குறைக்கிறது. மேலும் பற்களை சுத்தம் படுத்தி பற்சொத்தை வராமல் தடுக்கிறது.
நன்றி : http://tamilasian.com/site-doctor/2018/02/18/parcottaiya/

No comments:

Post a Comment