Wednesday, July 5, 2017

இயற்கை மருத்துவம்

1) ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தை பொரித்து இடித்து தூள் செய்து ஒரு கப் மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.
2) தினமும் மணத்தக்காளி கீரையை துவையல் செய்து மதிய உணவுடன் உண்டு வர குடல் புண் குணமாகும்.
3) கிஸ்மிஸ் பழம், கொத்தமல்லி இலையை தண்ணீரில் சுட வைத்து காலையில் அரைத்து வடி கட்டி குடித்தால் மார்பு படபடப்பு குணமாகும்.

4) ஒரு கையளவு அரச இலை கொழுந்தை ஒரு குவளை மோருடன் கலந்து தினமும் காலை ஒரு முறை அருந்த வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
5) காலை உணவு உண்பதற்கு முன் வில்வ பழத்தின் சதை பகுதியிடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட குடலில் கசடு தங்காமல் சுத்தமாகும்.
6) தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
7) நம் வீடுகளில் வைக்கும் ரசத்தில் புளிக்கு பதிலாக வில்வ மரத்தின் பூக்களை பயன்படுத்தி சாப்பிட்டு வர குடல் வலிமை பெரும்.
8) குப்பைமேனியை தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைத்து தடவ தலைவலி குணமாகும்.
9) எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு மூன்றையும் நல்லெண்ணையில் கொதிக்க வைத்து தலைக்கு தேய்த்து வர ஒற்றை தலைவலி குணமாகும்.
10) ஒரு கப் எலுமிச்சம் பழச்சாறு, 3 தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் குணமாகும்.
நன்றி : எல்.கார்த்திக்கேயன் 

No comments:

Post a Comment