Sunday, June 4, 2017

பசியின்மையை போக்கும் பிரண்டை

பசியின்மையை போக்க கூடியதும், எலும்புக்கு வலு சேர்க்கும் தன்மை கொண்டதும், எதிர்ப்பு சக்தி உடையதுமான பிரண்டையின் சிறப்பை பற்றி இன்று நாம் பார்ப்போம்: பிரண்டை எலும்பை ஒட்டக்கூடிய தன்மை கொண்டது. எலும்பை பலப்படுத்தும் பிரண்டை ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. காடு, மலை, சாலை ஓரங்களில் இந்த பிரண்டை கிடைக்கும். அழகுக்காகவும் இது வளர்க்கப்படுகிறது.

இளம் பிரண்டையை எடுத்து கொண்டு அதன் கணுக்கள், நார்களை நீக்கவும். முற்றிய பிரண்டையை பயன்படுத்துவதை காட்டிலும் இளம் பிரண்டையே நல்லது. இளம் பிரண்டையை துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். அவைகளை சுண்ணாம்பு தண்ணீர் அல்லது புளித் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 2 முதல் 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கலாம். பின்னர், பிரண்டை துண்டுகளுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் சிறிதளவு மிளகு பொடி, சுக்குப் பொடி சேர்த்துக்கொள்ள வேண்டும். சுவைக்காக உப்பு சிறிதளவு சேர்க்கலாம்.
இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர பசியின்மை சரியாகும். செரிமாணத்துக்கு மிகவும் நல்லது. குமட்டல், மலச்சிக்கல், மூலம் ஆகியவற்றை குணப்படுத்தும். பிரண்டையை பயன்படுத்தி வலி வீக்கத்தை போக்கும் மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம். பிரண்டையை சாறாக எடுத்து கொள்ளவும். அதனுடன் புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். இந்த மருந்தை வலி இருக்கும் இடத்தில் தடவலாம். இது எலும்பு முறிவை சரிசெய்யும்.
பிரண்டை பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இந்த பொடியை ஒன்று முதல் 1 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கசாயம் போல் தயாரானவுடன் அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து பயன்படுத்தலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பிரண்டை, உடலுக்கு புத்துணர்வை கொடுக்க கூடியது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. எலும்பு பலவீனம் அடைவதை தடுக்கிறது. எலும்பை பலப்படுத்த கூடியவை. ரத்தத்தை கெட்டிப்படுத்தும் தன்மை கொண்டது பிரண்டை. வீக்கத்தை குறைக்கவல்லது. பிரண்டையில் விட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் ஆகியவை அதிகளவில் இருப்பதால் எலும்புக்கு வலு சேர்க்க கூடியதாக அமைகிறது.
நன்றி : எல்.கார்த்திகேயன் 

No comments:

Post a Comment