Sunday, June 4, 2017

சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த ஆவாரம் பூ டீ

ஆவாரம்பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டும் இன்சுலின் பூஸ்டர்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. இந்த டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஆவாரம் பூ, இலை, பட்டை, வேர், விதை ஐந்தும் சேர்த்துச் செய்த பொடி - 2 டீஸ்பூன்
அல்லது காய்ந்த ஆவாரம் பூ - 10 - 15, 
ஏலக்காய் - 2,
பட்டை - சிறிய துண்டு,
தேன் - ஒரு டீஸ்பூன்,
பால் - கால் கப்.
செய்முறை :
* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு டம்ளர் நீர் ஊற்றி கொதி வந்ததும் அதில் ஆவாரம் பூ பொடி, பட்டை, பொடித்த ஏலக்காய் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
* நீர் பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன், பால் சேர்த்துப் பருகவும்.
* சூப்பரான ஆவாரம் பூ டீ ரெடி.
நன்றி : எல்.கார்த்திகேயன் 

No comments:

Post a Comment