Wednesday, March 18, 2015

நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து

ஆந்திராவின் பலமனேர் அருகே விருபாட்சிபுரம் என்ற ஒரு குக்கிராமத்தில் உள்ள சித்தவைத்திய சாலை. இங்கு நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து கொடுக்கப்படுகிறது .நடக்க முடியாதவர்கள் காரிலேயே உட்கார்ந்து இருந்தால் போதும் அவரே வந்து மருந்து கொடுக்கிறார். ஓய்வறைகளும் உள்ளது.
மருத்துவர் ஒரு சட்டையும், லுங்கியும் கட்டிக்கொண்டு சாதாரணமாக தன் கையாலேயே ஒரு கிளாஸ்ல மருந்து கொடுக்கிறார். ஒரேமருந்து எல்லாருக்கும். எந்த கேள்வியும் இல்லை. மூன்று மணிநேர இடைவெளியில் மூன்று முறை குடிக்கனும். கொஞ்சம் புழுங்கலரிசி சோறு தராங்க. சாப்பிட்டுவிட்டு வரனும். 500ரூபாய் கட்டணம். இங்கே வருபவர்கள் பெரும்பாலும் பெரிய பணக்காரர்களே.
15நாள் இடைவெளியில் மீண்டும் தரனும், இது இரண்டாம் கட்டம் என் பாட்டிக்கு, முதலில் நம்பவில்லை. ஆனால் இப்போது நல்ல முன்னேற்றம். BP அதிகமாகி பக்கவாதத்தில் சுயநினைவின்றி கிடந்தவரை கொண்டு சென்றோம். இப்போது நல்ல முன்னேற்றம். கைகால்கள் அசைக்கிறார். சாப்பிடுகிறார். மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட நிலையில் சென்றோம்.
இன்னொரு முறை வரனும். (மொத்தம் மூன்று முறை வரவேண்டும், அதேபோல ஒரு ட்ரிப்புக்கு மூன்றுமணி நேர இடைவெளியில மூன்று முறை தரவேண்டும் , ஆக மொத்தம் ஒன்பது வேளை) சரியாகிவிடும் நம்பிக்கை இருக்கு. ஆனால் மருத்துவ மனைகளுக்கு போயிருந்தால் எத்தனை லட்சங்கள் ஆகியிருக்குமோ தெரியாது. தினமும் குறைந்தது 250பேர் மூன்று மாநிலங்களில் இருந்தும் வராங்க. உங்களில் யாருக்காவது பாதிப்பிருந்தால் போய்வாருங்கள். நல்லதே நடக்கிறது.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. மூட்டுவலிக்கு இந்த மருத்துவம் கை கொடுக்குமா?

      Delete