Showing posts with label கூந்தல் பராமரிப்பு. Show all posts
Showing posts with label கூந்தல் பராமரிப்பு. Show all posts

Thursday, August 24, 2017

முடி செழித்து வளர

~~~~~~ 🌹🌹 ~~~~~
1.தேங்காய் எண்ணெயை எலுமிச்சை சாற்றில் கலந்து, கூந்தலுக்கு தடவி குளித்து வர, முடிஉதிர்தல் கட்டுப்படும். கூந்தலும் நன்கு வளரும்.
2.முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் (வாரம் ஒருமுறை) தொடர்ந்து மூன்று மாத காலம் குளிக்க முடி கொட்டுவது நின்று விடும் நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.
3.முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சீகக்காய் போட்டு குளிக்க தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
4.செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்துவர முடி உதிராது. கருமையாகவும் மாறும்.ஷ...ரு🌿🌸
5.சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்க முடி உதிராது...
~~~~~~ 🌹🌹 ~~~~~
நன்றி : ஷங்கர் குரு - பாட்டி வைத்தியம் 

Friday, August 18, 2017

நரைமுடி, முடி உதிர்தல் , பாதிப்பில்லாமல் முடி அடர்த்தியாகவும் வளர.

தேவையானவை : 
சுத்தமான தேங்காய் எண்ணெய் – 2 கப் அளவு 
நெல்லிக்காய் பெரியது – 4 
மருதாணி இலை – கைப்பிடி 
அளவு கருவேப்பிலை- 1 கப் அளவு 
செம்பருத்தி இதழ்கள் – 2 பூக்கள் 
சீரகம் – 4 ஸ்பூன் கிராம்பு – 3

செய்முறை : 
முதலில் நெல்லிக்காயை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மருதாணி மற்றும் கருவேப்பிலையையும் நறுக்கிக் கொள்ளுங்கள்.
 செம்பருத்தி இதழை பிரித்து நன்றாக தண்ணீரில் அதன் மேலுள்ள மருந்துகள் போகும் வரை அலசிக் கொள்ளுங்கள்
சீரகம் கிராம்பையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் எண்ணெயை சூடாக வேண்டும். அதில் நெல்லிக்காய், மருதாணி கருவேப்பிலை ஒன்றன்பினொன்றாக போடவும். அதன் நிறம் மாறி அடியில் தங்கும் வரை குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள்.

Monday, August 14, 2017

கொத்து கொத்தா முடி கொட்டுதா?

முடி கொட்டுவதும் நரை முடி உண்டாவதும் இன்றைய காலக்கட்டத்தில் சிறு குழந்தைகளுக்கும் சகஜமாக போய் விட்டது. இதனை தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வந்த பின் புலம்புவதுதான் நம்மில் பாதி பேர்.
நரை முடியாகட்டும், முடி உதிர்தல் ஆகட்டும் வந்த பின் பழையபடி கொண்டு வருவது அத்தனை எளிதல்ல. இதற்கு மாதங்கள் சிறிது எடுத்தாலும், சிரத்தையாக இங்கு சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை செய்தால் நல்ல பலனை தரும். நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.