Monday, June 11, 2018

என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும். பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை. அதாவது நம் உடல் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்வதே தைராய்டு நோயாகும்
. அறிகுறிகள்:                                                                                                          கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டின் பிரதான அறிகுறிகள்.                                                                          நல்ல பசியிருந்தும் உடல் எடை குறைதல், இருதயத் துடிப்பு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, அதிக வியர்வை, மாதவிடாய் சட்டு சட்டென வருதல், குடல் இயக்கம் அதிகரித்தல், கை நடுக்கம். ஆகியவையும் தைராய்ட் அறிகுறிகளாகும்.                                                                                                                  உடல் எடைக்குறைப்பிற்கான அனைத்து வேலைகளைச் செய்தும் உடல் எடை குறையாமல் இருப்பது அல்லது உடல் எடை அதிகரிப்பது, சோம்பல், இருதய துடிப்பு இருக்கவேண்டிய அளவை விட குறைதல், கைகள் மறத்துப் போதல், வறண்ட சருமம், மாதவிடாயில் வெளியேற்றம் கடுமையாக இருத்தல். மலச்சிக்கல் ஆகியவையும் தைராய்டு அறிகுறிகளாகும்.                    வீட்டில் உள்ள பொருள்களை வைத்து எப்படி அதன் தாக்கத்தை குறைக்கலாம் என தெரிந்துக்கொள்ளுங்கள்
வெங்காயம்
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், இரவில் தூங்குவதற்கு முன் சிவப்பு வெங்காயத்தை பாதியாக வெட்டி, அதன் சாற்றினை எடுத்து கழுத்துப் பகுதியில் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால், தைராய்டு சுரப்பியின் செயல்பாடு தூண்டப்படுவதோடு, அது சீரான அளவில் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
பசலைக்கீரை
பசலைக் கீரைச் சாறு (100 மிலி) மற்றும் இஞ்சிச் சாறு (100 மிலி) ஆகியவற்றில் 100 கிராம் கொள்ளை ஊற வைத்து பிறகு காய வைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். இதில் தினமும் 2 ஸ்பூன் எடுத்து சிறிய வெங்காயம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் தைராய்டு நோய்கள் குணமாகும்.
ரோஸ்மேரி ஆயில்
சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை நீர் நிரப்பிய குளியல் டப்பில் சேர்த்து கலந்து, அதனுள் 15-20 நிமிடம் உட்கார வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் விரைவில் ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தேங்காய் எண்ணெய்
தினமும் 1-2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் தேங்காய் எண்ணெயை சூடேற்றக்கூடாது. இதனால் அதில் உள்ள கொழுப்பு அமிலங்கள், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.
மனக்கவலை, அழுத்தமும் தைராய்ட் சுரப்பி சரியாக வேலை செய்யாததின் ஒரு அறிகுறியே. எனவே மனதை இலகாக்குவது அவசியம்.
சிலருக்கு தைராய்டு சுரப்பியிலிருந்து ஹார்மோன்கள் தேவைக்குக் குறைவாக சுரக்கும். இது ஹைபோ தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மருத்துவரின் ஆலோசனையின் படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.
தைராய்டு சுரப்பி பழுதை உடனடியாக குணம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : https://www.tamilnews.lk/

No comments:

Post a Comment