Saturday, September 26, 2015

சுக்கு காபியில் பால் சேர்க்கலாமா?

கிராமப்புறங்களில் சுக்கு காபி குடிப்பது வழக்கம். சுக்கு காபி என்றதும் பலர் சுக்குப் பொடியை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பார்கள். இன்னும் சிலர் தேயிலை, பாலுடன் சேர்த்து அருந்துவார்கள். இது சரியான முறையல்ல.
சுக்கு காபி என்றால் அதனுடன் மிளகு, கொத்தமல்லி, ஏலக்காய் சேர்க்க வேண்டும். ஒரு மடங்கு மிளகு என்றால் அதைவிட 2 மடங்கு சுக்கு, 4 மடங்கு கொத்தமல்லி (தனியா), 10, 12 ஏலக்காய் சேர்த்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் நம் தேவைக்கேற்றார்போல ஒன்றிரண்டு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, பனைவெல்லம் சேர்த்து வடிகட்டி அருந்தலாம். இதில் பால் சேர்க்கக்கூடாது. இதுதான் சுக்கு காபி.

நன்றி : ‪#‎doctorvikatan‬ ‪#‎விகடன்‬

No comments:

Post a Comment