Sunday, August 2, 2015

வீட்டுக் குறிப்புகள்,

# கைப்பிடி அளவு கல் உப்பை சிறு மூட்டையாக முடிந்து, அரிசி மூட்டைக்குப் பக்கத்தில் வைத்தால் பூச்சிகள் அண்டாது.
# அரிசி, காய்கறிகளைக் கழுவிய தண்ணீரைச் செடிகளுக்கு ஊற்றினால் நன்றாகச் செழித்து வளரும்.
# காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டால் பூச்சிகள் வராது.
# பச்சை மிளகாயைக் காம்பு கிள்ளி, செய்தித்தாளில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது.
# ஆடைகளில் ஸ்கெட்ச் பேனாவால் கறை ஏற்பட்டால், நெயில் பாலிஷ் ரிமூவரைத் தேய்த்தால் கறை நீங்கும்.
# வெள்ளிப் பாத்திரங்கள் வைத்திருக்கும் பையில் சிறிது கற்பூரத்தைப் போட்டுவைத்தால் வெள்ளி கருக்காது.
# முட்டைகோஸை வேகவைத்து அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்துத் தலையில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து குளித்தால் முடி உதிர்வது குறையும்.
# படிகாரத்தைத் தண்ணீரில் கரைத்து, முகத்தில் தடவிவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறையும்.
# காஸ் அடுப்பில் சமைக்கும்போது தீயைக் குறைத்து வைத்துச் சமைத்தால் எரிபொருள் செலவு குறைவதுடன், சமைத்த உணவும் சுவையாக இருக்கும்.
# டைனிங் டேபிளில் வேப்பிலையைக் கசக்கிவைத்தால், ஈக்கள் மொய்க்காது.
# குக்கரின் உள்ளே கறைபடிந்திருந்தால் பெரிய வெங்காயத்தை நறுக்கித் தேய்த்தால் போய்விடும்.
# வெள்ளைத் துணிகளைத் துவைக்கும்போது தண்ணீரில் சிறிதளவு டேபிள் சால்ட் கலந்துகொண்டால் துணி வெண்மையாகும்.
# கேரட்டை அரைத்து மோருடன் கலந்து குடித்துவர உடல் பருமன் குறையும்.
நன்றி : தி இந்து 02.08.2015

No comments:

Post a Comment