Tuesday, February 28, 2017

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!!

1)சோடா
இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

Monday, February 27, 2017

கரும்புள்ளி மறைய


கரும்புள்ளி சருமத்தின் அழகை பாழ்படுத்தும். கிருமிகள், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் தங்கி கரும்புள்ளிகளாக வெளிப்படும். இந்த கரும்புள்ளிகளை எளிதால அகற்றி விடலாம்.

சருமத்தை சுத்தப்படுத்துவதே எளிய வழி. சோப்பை போட்டு தேய்ப்பதால் வறட்சி அதிகமாகுமே தவிர, ஆழமான சென்று இந்த கரும்புள்ளியை அகற்றாது.

Friday, February 17, 2017

முதுகு அல்லது இடுப்பு வலியைப் போக்க

இத தினமும் குடிச்சா, இனிமேல் முதுகு வலியே வராது தெரியுமா?
இங்கு முதுகு அல்லது இடுப்பு வலியைப் போக்கும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
பலருக்கும் கடுமையான இடுப்பு அல்லது முதுகு வலி இருக்கும். இப்பிரச்சனை உள்ளவர்களால் எந்த ஒரு கனமான பொருளையும் தூக்க முடியாது. ஏன் நீண்ட நேரம் நிற்கவோ, உட்காரவோ கூட முடியாது. சிலருக்கு முதுகு, இடுப்பு, கால் ஆகிய மூன்று பகுதிகளிலும் ஒரே நேரத்தில் கடுமையான வலி இருக்கும். இந்த வகையான முதுகு வலி இடுப்புமூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள பிரச்சனையால் வருவதாகும்.

ஆண்மை அதிகரிக்க

விந்து அதிகரிக்க
1, வில்வ பழ சதையை கற்கண்டு கூட்டி தினமும் காலையில் உண்டு வர விந்துவை அதிகபடுத்தும்.
வில்வப் பழம் பல நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அதை கொண்டு வந்து ஓட்டை நீக்கி விட்டு உள்ளிருக்கும் காய்ந்த சதையை மட்டு எடுத்து வெயிலில் நன்றாக காயவைத்து பொடித்து கொள்ளவும். இதனுடன் கற்கண்டு தூளையும் நன்றாக சேர்த்து புட்டியில் பத்திரபடுத்தி கொள்ளவும். இதை தினமும் உபயோகித்து வரலாம்.

Wednesday, February 15, 2017

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
நன்றி - ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ் - தமிழாக்கம்; Mannargudi Banukumar

மூலிகை நீர் - இயற்கை மருத்துவம்


சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.
ஆவாரம்பூ நீர்
"ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ" என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

Tuesday, February 14, 2017

நல்லெண்ணைய்

ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்.!
எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.