Sunday, June 4, 2017

தொடர் தும்மல் நீங்க

* பப்ளிமாசு பழங்களை எடுத்து நறுக்கி அதனுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி சிறிது தேன் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் தும்மல் குறையும்.
* ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை எடுத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தை அரைத்து போட்டு அந்த நீரை ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டு இருந்தால் அடிக்கடி வரும் தும்மல் குறையும்.
* பரட்டைக் கீரை சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் நான்கு சிட்டிகை அளவு குழைத்துச் சாப்பிட்டால் தும்மல் குறையும்.

தெரிந்துகொள்வோம்


  • ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!
  • தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......!
  • தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!
  • குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!
  • மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!
நன்றி : தயாளன் 

Saturday, June 3, 2017

சீரகம்

தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா  15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.

இயற்கை மருத்துவம்

1. ஒரு 30 வினாடிகள் இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம் Oxygen பற்றாக்குறை தான் அதனால் ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள் கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்!

Monday, May 8, 2017

குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம்

குறட்டை பிரச்சனைக்கு குண்டாக இருந்தாலோ, நேராக படுத்தாலோ, தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டாலோ, சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டாலோ, சைனஸ் பிரச்சனை இருந்தாலோ, புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ வரக்கூடும்.
* ஆவி பிடிப்பது ஆவி பிடிப்பதன் மூலம் நாசி துவாரங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு நீங்கும். இதனால் இரவில் மூச்சு விடுவதில் சிரமம் ஏதும் இருக்காது.

கோடை காலத்தில் உடலை குளிர்விக்கும் உணவுகள்

கோடை காலம் உடல் நலத்திற்கு பல்வேறு வகையில் இடையூறு விளைவிக்கும். தோல் நோய்கள் தலைதூக்கும். அம்மை நோய், மஞ்சள் காமாலை போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். ஒருசிலர் குளிர்காலம் மட்டுமின்றி கோடை காலத்திலும் ஜலதோஷ பிரச்சினையால் அவதிப்படுவார்கள்.
மோர், இளநீர் பருகினாலே ஜலதோஷம் பிடிக்கக் கூடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறவர்கள் மோருடன் சிறிது மிளகு தூளை சேர்த்து பருகலாம். மோருடன் கீழா நெல்லியை அரைத்து சாறு பிழிந்து குடிக்கலாம். அதனை காலை வேளையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது.

மாசிக்காய்

சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், ஓர் அற்புதமான மருந்து.
மாசிக்காயை பொடி செய்து வெந்நீரில் போட்டு, 10 நிமிடம் சென்ற பின் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
மாசிக்காயை பொடி செய்து, அதனை சிறிதளவு தினம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும், அதிகரத்தப் போக்கு கட்டுப்படும். மாசிக்காயை பொடித்து, 50 கிராம் எடுத்து, 800மி.லி.,நீருடன் கலந்து, 10 நிமிடம் நன்கு காய்ச்சி பின்னர் வடிகட்டி அதனை, 30 மி.லி., முதல் 60 மி.லி., வீதம் அருந்திவந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், நாட்பட்ட இருமல், பெருங்கழிச்சல் முதலியவை குணமாகும்.